நீட் மாணவர்களின் தகவல்கள் விற்பனையா? சி.பி.எஸ்.இ-க்கு ராகுல்காந்தி கேள்வி

நீட் மாணவர்களின் தகவல்கள் விற்பனையா? சி.பி.எஸ்.இ-க்கு ராகுல்காந்தி கேள்வி

நாடு முழுவதிலும் இருந்து மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக வெளியாகி உள்ள தகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை வைத்துள்ள சி.பி.எஸ்.இ. மாணவர்களின் தகவல்களை திருட அனுமதிப்பதா? என சமூக ஆர்வலர்கள் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து ‘நீட்’ தேர்வு நடத்திய சி.பி.எஸ்.இ.யின் தலைவர் அனிதா கர்வாலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் பெயர், செல்போன் எண், இமெயில் முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள், ஒரு இணையதளத்தில் விலைக்கு விற்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளதாகவும், மாணவர்களின் தனிநபர் ரகசியத்தை மீறும் செயல் இது என்றும், இதை தடுக்க போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாதது அதிர்ச்சி அளிப்பதாகவும், எதிர்காலத்தில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை உருவாக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்த திருட்டு குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்

Leave a Reply