கெய்ரோ : எகிப்தில் ராணுவத்தால் ஜூலையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் முகமது முர்ஷி நேற்று கெய்ரோவில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பதவி நீக்கத்துக்கு பின்னர் அவர் வெளியே அழைத்து வரப்பட்டது இதுவே முதல் முறை. நீதிமன்றத்தில், ‘‘இந்த விசாரணை சட்டத்துக்கு புறம்பானது. நான் இந்த குடியரசின் அதிபர்’’ என்று விவாதித்தார். கைதிகள் உடையணியவும் அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து விசாரணை ஜனவரி 8க்கு ஒத்திவைக்கப்பட்டது.