தனுஷ் படத்தை மொக்கை படம் என மிகக்கடுமையாக விமர்சனம் செய்த பிரபல இயக்குனர் ஒருவர் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதனால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் தனுஷ், அமலாபால் நடித்து வெளியான “வேலையில்லா பட்டதாரி” திரைப்படம் தமிழகம் முழுவதும் மாபெரும் வெற்றியுடன் ஓடிக்கொண்டு இருக்கின்றது. தியேட்டர்களில் நல்ல வசூல் வருவதாகவும், ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் இடையே பாசிட்டிவ் விமர்சனங்களும் வருவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. தனது 25வது படம் மாபெரும் வெற்றி பெற்றதால் தனுஷ் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றார்.
இந்நிலையில் மலையாளத்தில் “ஓம் சாந்தி ஓஷானா” என்ற படத்தை இயக்கிய இயக்குனர் ஜூத் ஜோசப், இன்று காலை தனது ஃபேஸ்புக் தளத்தில், “வேலையில்லா பட்டதாரி ஒரு மொக்கை படம். எனக்கு அந்த படம் கொஞ்சமும் பிடிக்கவில்லை” என்று கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் தனுஷ் ரசிகர்கள் அவர் மீது ஒருமையில் கடும் விமர்சனத்துடன் பதிலளித்துக்கொண்டு வருகின்றனர். இதனால் இயக்குனர் ஜூத் ஜோசப் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். தான் RIP என்ற படத்தைத்தான் விமர்சனம் செய்ததாகவும் ஆனால் அது தவறாக VIP என்று டைப் ஆகிவிட்டதாகவும், தனுஷ் மீது தனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்றும் கூறியுள்ளார். ஆனால் தனுஷ் ரசிகர்கள் இடைவிடாமல் அவர் மீது கடுமையாக வசைமொழிகளை பொழிந்து வருகின்றனர்.