பாண்டியநாடு என்ற வெற்றிப்படத்தை தயாரித்து நடித்த நடிகர் விஷால் அடுத்து அவர் தயாரித்து நடிக்கும் படம் ‘நான் சிகப்பு மனிதன்’. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மீண்டும் லட்சுமி மேனன் நடிக்கிறார்.
இந்த படத்தில் நடிகை இனியா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இனியா இந்த படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க உள்ளார். இரண்டு ஹீரோயின்கள் நடிக்கும் படத்தில் நடிக்க தனக்கு எவ்வித தயக்கமும் இல்லையென்றும், தனது கேரக்டரின் முக்கியத்துவத்தை தாம் பார்ப்பதாகவும் செய்தியாளர்களிடம் இனியா கூறினார்.
ரிச்சர்டு நாதன் ஒளிப்பதிவு, ஆண்டனி ரூபன் எடிட்டிங்கில் உருவாகும் இந்த படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் சுமார் ரூ.30கோடி செலவில் தயாரிக்கின்றது. மேலும் இந்த படத்திற்கும் ரஜினிகாந்த் நடித்த
‘நான் சிகப்பு மனிதன்’ படத்திற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்றும் படத்தின் தலைப்பில் மற்றுமே ஒற்றுமை இருப்பதாகவும் இயக்குனர் திரு கூறியுள்ளார். திரு. கிருஷ்ணமூர்த்தி என்ற திரு, ஏற்கனவே விஷாலை வைத்து தீராத விளையாட்டு பிள்ளை, சமர் போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.