ஐசியூ இல்லாத மருத்துவமனைகள் அறுவை சிகிச்சை செய்ய கூடாது. உச்சநீதிமன்றம்
ஐசியூ என்ற அவசர சிகிச்சை பிரிவு இல்லாத மருத்துவமனைகள் அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஐசியூ இல்லாத மருத்துவமனை ஒன்றில் தனது மனைவிக்கு அறுவை சிகிச்சை நடந்ததால் அவர் உயிரிழக்க நேரிட்டதாக கொல்கத்தாவை சேர்ந்த பிஜோய்குமார் சின்ஹா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
23ஆண்டுகளுக்கு முன்னர் தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணை பல்வேறு கட்டங்களை தாண்டி நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை தொடர்ந்த பிஜோய்குமாரும் இறந்துவிட்டார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் பிஜோய்குமார் மகனுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குமாறு சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு உத்தரவிட்டதோடு அவசர சிகிச்சை பிரிவு இல்லாத மருத்துவமனைகள் அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தியது.