ஜவஹர்லால் நேரு சிலை திடீர் அகற்றம்: உபியில் பதட்டம்

ஜவஹர்லால் நேரு சிலை திடீர் அகற்றம்: உபியில் பதட்டம்

இந்தியாவின் முதல் பிரதமரும், சுதந்திர போராட்ட வீரர்களில் முக்கியமானவருமான ஜவஹர்லால் நேரு சிலை உத்தரபிரதேசத்தில் அகற்றப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் அலகாபாத் நகரில் சாலை விரிவாக்கப் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அலகாபாத் நகரில் சாலை நடுவே அமைக்கப்பட்டு இருந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு சிலையை அகற்ற நகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதனையடுத்து சாலையில் வைக்கப்பட்டு இருந்த ஜவஹர்லால் சிலையை நகராட்சி அதிகாரிகள் நேற்று அகற்றினர். நேரு சிலை அகற்றப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அலுவலர்களிடம் வாக்குவாதம் செய்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நடவடிக்கை முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பழிவாங்கும் செயல் என காங்கிரஸார் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து அலகாபாஅத் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியபோது, அகற்றப்பட்ட நேருவின் சிலை அதே பகுதியில் உளள பூங்கா ஒன்றில் நேரு சிலை அமைக்கப்படும் என கூறியதை அடுத்து காங்கிரஸார் சமாதானம் அடைந்தனர்.

Leave a Reply