தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபரான நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும், சிகிச்சை மேற்கொள்வதால் தற்போது அவரால் பேசமுடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
95 வயதாகும் நெல்சன் மண்டேலாவிற்கு சில மாதங்களுக்கு முன் நுரையீரலில் தொற்று ஏற்பட்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். எனவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் இருந்த அவர் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில், மீண்டும் மண்டேலாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
அதனால் அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுரையீரலில் தொற்று ஏற்பட்டு அவதிப்பட்டு வரும் மண்டேலாவால் பேசமுடியவில்லை என்றும், அவரது வீட்டில் 22 மருத்துவர்கள் அவரது உடல்நிலையை கண்காணித்து வந்ததாகவும் அவரது முன்னாள் மனைவி தெரிவித்துள்ளார்.