திமுக தலைவருக்கு நெப்போலியன் அனுப்பிய விலகல் கடிதம்.

nepoleanஇன்று பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட திமுகவை சேர்ந்த நடிகர் நெப்போலியன், முன்னதாக திமுக தலைவருக்கு தனது ராஜினாமாவை முறைப்படி கடிதம் மூலம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது: ‘

அந்த விலகல் கடிதத்தில், பெருமதிப்புக்குரிய தலைவர்-பொதுச்செயலாளருக்கு வணக்கம், எனது 16 வயதில் இருந்து கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ந்து நான் பணியாற்றிய, என்னை உருவாக்கிய தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறேன். இதுநாள் வரை எனக்கு உயர்வளித்து, ஆதரவளித்து, அன்பு பாராட்டிய இயக்கத்தின் தலைவருக்கும், பொதுச்செயலாளருக்கும், பொருளாளர் மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும், என்னிடம் அன்பு பாராட்டிய தி.மு.க.தொண்டர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி”

இவ்வாறு கடிதத்தை அனுப்பிய பின்னர் நேராக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமீத்ஷா அவர்களை சந்தித்த நெப்போலியன் பாஜகவின் தனது ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இணைந்தார். அவரை அமித்ஷா உவகையுடன் வரவேற்றார். ஏற்கனவே பாஜகவில் கங்கை அமரன், குட்டி பத்மினி, காயத்ரி ரகுராம் ஆகியோர் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply