நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டு அருகே பேருந்து ஒன்று மலைப் பள்ளத்தாக்கிற்குள் கவிழ்ந்து விழுந்த படுபயங்கர விபத்தில் 29 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 40க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காத்மண்டு நகரின் மேற்கு பகுதியான தோதி என்ற பகுதியில் இருந்து தங்காதி என்ற பகுதிக்கு 100 பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று புறப்பட்டது. தசரா விழாவை முடித்துவிட்டு அவரவர் ஊருக்கு செல்லும் பக்தர்கள் அதிகம் இருந்த இந்த பேருந்து சத்திவான் என்ற கிராமம் அருகில் உள்ள மலைச் சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கிற்குள் தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்து குறித்த தகவல் அறிந்தவுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு மீட்புப்படையினர்களும், காவல்துறையினர்களும் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதுவரை 29 உடல்களை கைப்பற்றியுள்ளதாகவும் மேலும் மீட்புப்பணி துரிதமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
படுகாயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1uTYEZ5″ standard=”http://www.youtube.com/v/L8yP3dO4hv4?fs=1″ vars=”ytid=L8yP3dO4hv4&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep9004″ /]