இந்தியா, சீன எல்லைகளை பாதுகாக்க நேபாளத்தின் புதிய திட்டம்

இந்தியா, சீன எல்லைகளை பாதுகாக்க நேபாளத்தின் புதிய திட்டம்

அண்டை நாடுகளான இந்திய மற்றும் சீன நாடுகளின் எல்லை பகுதிகளை பாதுகாக்க தனி நிறுவனம் ஒன்றை அமைக்க நேபாளம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

எல்லைகளை பாதுகாப்பது குறித்து நேபாள நாட்டின் உள்துறை அமைச்சர் ராம் பகதூ் தாபா நேற்று பேட்டில் ஒன்றில் கூறியபோது, ‘இந்தியா, சீனா உடனான எல்லைகளை பாதுகாக்கும் வகையில் நேபாள நாடு ஒரு தனி அமைப்பு ஒன்றை நிறுவ திட்டமிட்டு உள்ளது. தற்போதுள்ள பாதுகாப்பு படைகளால் எல்லா எல்லைப்பகுதிகளையும் மேற்பார்வையிட முடியாது. இதனால் தற்போது நாட்டின் சர்வதேச எல்லையை நிர்வகிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது என்று கூறினார்.

நீண்ட நெடுங்காலமாக இந்தியாவுடன் நட்புறவு கொண்டிருந்த நேபாள நாடு கடந்த சில ஆண்டுகளாக சீனாவுடன் நெருங்கி பழகி வருகிறது. அதற்கு பிரதிபலனாக சீனாவும் பல்வேறு வளர்ச்சி பணிகளை நேபாளத்தில் செய்து வருகிறது. குறிப்பாக டோக்லாம், அருணாசல பிரதேச எல்லைப் பிரச்னைகளை தொடர்ந்து சீனா நேபாளத்திற்கு பல்வேறு வழிகளில் உதவி செய்து வருகிறது. இந்த நிலையில் இருநாடுகளையும் பகைத்து கொள்ள விரும்பாத நேபாளம் தற்போது தனி நிறுவனம் மூலம் எல்லைகளை கண்காணிக்க அமைப்பு ஒன்றை நிறுவ திட்டமிட்டுள்ளது.

Leave a Reply