நேபாள பிரதமர் பிரசந்தா ராஜினாமா!

நேபாள பிரதமர் பிரசந்தா ராஜினாமா!

நேபாளம் நாட்டின் பிரதமர் பிரசந்தா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரை தொடர்ந்து, நேபாளி காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷெர் பகதுர் தியூபா புதிய பிரதமராகப் பதவியேற்க உள்ளார். கடந்த 10 மாதங்களாக பிரதமர் பதவி வகித்து வந்த பிரசந்தாவின் ராஜினாமா நிகழ்வு, நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இடதுசாரி கட்சித் தலைவரான பிரசந்தாவும், காங்கிரஸ் கட்சித் தலைவர் ஷெர் பகதுரும் சேர்ந்து, சுழற்சி முறையில் நேபாளத்தின பிரதமர் பதவியை வகிக்க, ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளனர். இதன்படி, 10 மாதங்களுக்கு முன்பாக, அப்போதைய பிரதமர் ஒளி பதவி விலகியதை தொடர்ந்து, பிரசந்தா பதவியேற்றார். தற்போது, அவர் ராஜினாமா செய்ததால், புதிய பிரதமராக ஷெர் பகதுர் பொறுப்பேற்க உள்ளார்.

2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நேபாளத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதுவரையிலும் ஷெர் பகதுர் பதவியில் நீடிப்பார் எனக் கூறப்படுகிறது.

Leave a Reply