நேபாள பிரதமர் ராஜினாமா? புதிய பிரதமர் யார்?
நேபாள பிரதமர் சுஷில் கொய்ரால திடீரென தாமாகவே முன் வந்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளதால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமர், தன்னுடைய ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ராம் பரன் யாதவ்விடம் அளிக்க உள்ளதாகவும், இந்நாட்டின் புதிய பிரதமராக கேபி சர்மா ஒளி தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் நேபாள நாட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
நேபாள நாட்டின் காங்கிரஸ் தலைவரான சுஷில் கொய்ரால கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ந்தேதி பிரதமராக பதவியேற்றார். பிரதமர் பதவியை அவர் ஏற்று ஒன்றரை வருட காலமே ஆகிய நிலையில் தற்போது திடீரென பதவி விலகுவது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜினாமாவிற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை.
74 வயதாகும் இந்த பிரம்மச்சாரி கொய்ராலா குடும்பத்தின் மூன்றாவது பிரதமர் ஆவார். இவருக்கு முன்னாள் பிரதமர் பதவி வகித்த கிரிஜா பிரசாத் கொய்ராலா மாவோயிஸ்டுகளுடன் கடந்த 2006 ஆம் ஆண்டு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் ஆவார். கடந்த ஐம்பதாண்டு காலமாக அரசியலில் இருக்கும் இவர் தனது எளிமைக்கும், தேசியவாத சிந்தனைகளுக்கும் மிகவும் அறியப்பட்டவர் ஆவார். அவரைப் போல் நேபாள-இந்திய எல்லையில் உள்ள நேபாள்கஞ்சில் பிறந்த சுஷில் கொய்ராலாவும் காத்மாண்டுவில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றார். அதுமட்டுமின்றி இதுவரை அவர் எந்த அதிகாரப் பொறுப்பையும் ஏற்றதில்லை என்று குறிப்பிடப்படுகின்றது.