நேபாள பிரதமர் இந்தியா வருகை. 9 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
நேபாள பிரதமர் ஷர்மா ஒலி 6 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று இந்தியா வருகை தந்துள்ளார். அவருக்கு இந்தியா சிவப்புக்கம்பள வரவேற்பை அளித்துள்ளது. மேலும் நேற்று நேபாள பிரதமர் ஷர்மா ஒலியுடன் நேபாள அமைச்சர்கள், அதிகாரிகள் என 77 பேர் அடங்கிய குழு வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா – நேபாளம் நாடுகளுக்கு இடையே கூட்டுறவு உள்பட 9 ஒப்பந்தங்கள் இருநாட்டு பிரதமர்களால்கையெழுத்தாகியுள்ளது.
இந்தியா வந்துள்ள நேபாள பிரதமர் ஷர்மா ஒலி, நேற்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பல்வேறு அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் நேபாளத்தில் உள்ள அரசியல் சூழ்நிலை குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். அடுத்து இந்தியா – நேபாளம் இடையே கல்வி, பாதுகாப்பு, வர்த்தகம், போக்குவரத்து என்பன உள்ளிட்ட ஒன்பது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன