20 ஓவர் உலகக்கோப்பை போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் நேபால் அணி, ஹாங்காக் அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேற்று ஆரம்பமான T20 உலகக்கோப்பை போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் ஹாங்காங் அணி நேபால் அணியுடன் மோதியது. டாஸ் வென்று ஹாங்காங் அணி, நேபால் அணியை பேட் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. நேபால் அணி நிர்ணயிக்கப்பாட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.
பின்னர் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹாங்காங் அணி, முதல் ஓவரின் முதல் பந்திலேயே இர்பான் அஹ்மது விக்கெட்டை இழந்ததால், கடும் அதிர்ச்சி அடைந்தது. பின்னர் விளையாடிய வீரர்களும் ரன்கள் எடுக்க தவறியதால் அந்த அணி 69 ரன்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து பரிதாப தோல்வி அடைந்தது. ஹாங்கான் அணி கடைசி 6 விக்கெட்டுக்களை வெறும் 11 ரன்கள் எடுப்பதற்குள் இழந்தது.
நேபால் வீரர் எஸ்.பி. கெளச்சான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நான்கு ஓவர்கள் வீசி, வெறும் ஒன்பது ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.