டிராய் தடை எதிரொலி. ஃப்ரி பேசிக்ஸ் திட்டத்தை அதிரடியாக நிறுத்தியது ஃபேஸ்புக்
இணையதளங்களை பயன்படுத்துவதில் கட்டண அடிப்படையில் சேவை வழங்குவதை டிராய் எனப்படும் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் நேற்று முன் தினம் தடை செய்தது. இதனையடுத்து “இந்தியாவில் இனி ஃப்ரீ பேசிக்ஸ் திட்டத்தை நிறுத்திக் கொள்வதாக ஃபேஸ்புக் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.
எவ்வித கட்டணமும் இன்றி, ஃபேஸ்புக் உள்பட பல சமூக இணையதளங்களை பயன்படுத்தும் வகையில் ஃப்ரி பேசிக்ஸ் என்ற திட்டத்தை ஃபேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தி இருந்தது. இந்தியாவின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வந்த திட்டம் கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ஃப்ரி பேசிக்ஸ் திட்டம் இந்தியா உள்பட மொத்தம் 17 நாடுகளில் அமலில் இருந்த நிலையில் டிராய் தடை காரணமாக இந்தியாவில் தற்போது நிறுத்த ஃபேஸ்புக் முடிவு செய்துள்ளது.
இந்த திட்டத்திற்காக ஃபேஸ்புக் நிறுவனம் கோடிக்கணக்கில் செலவு செய்து மிகப்பெரிய அளவில் விளம்பரங்கள் மூலம் ஆதரவு திரட்டியது. ஆனால், ஃபேஸ்புக்கின் இந்த முயற்சி இணையதள சமவாய்ப்புக்கு எதிரானது என கூறப்பட்டது. இந்த திட்டத்தால் குறிப்பிட்ட சில இணைதளங்களை மட்டுமே பார்க்க கூடிய வகையில் இணைய பயன்பாடு சுருங்கி விடும் என்று இந்த திட்டத்திற்கு ஏற்கனவே பல எதிர்ப்புகள் இருந்தது என்பது குறிப்பிடத்தகக்து.
Chennai Today News: Net neutrality debate: Facebook shuts down Free Basics in India