நேதாஜி உயிருடன் இருக்கும் ஆதாரத்தை வெளியிடுவேன். வைகோ

நேதாஜி உயிருடன் இருக்கும் ஆதாரத்தை வெளியிடுவேன். வைகோ
vaiko
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறித்த ஆவணங்களை சமீபத்தில் மேற்குவங்க அரசு வெளியிட்டது. மேலும் மத்திய அரசும் விரைவில் தன்னிடமுள்ள ஆவணங்களை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் நேதாஜி இன்னும் உயிருடன் இருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அதிரடியாக அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை அருகே நேற்று நடைபெற்ற நேதாஜி பிரகடன பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், ”ஆயுதம் ஏந்திய சுபாஷ் சந்திரபோஸ் நினைவு தினமான இன்று  ஆயுதபூஜை நடக்கிறது. 1946-ல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிரோடு இருப்பதாக காந்தி சொன்னார். ஆனால், அந்த உண்மையை வெளிப்படுத்தாமல் அப்போதிருந்த காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மறைத்து விட்டனர்.

நான் தொடர்ந்து கேட்டுக்கொண்டதால்தான் மேற்குவங்க முதல்வர் மம்தா, நேதாஜி பற்றிய ஆவணங்களை வெளியிட முன்வந்தார். ஆனால், ரஷ்யா அனுப்பிய நேதாஜியின் ஆவணங்களை மத்திய அரசு ஏன் இன்னும் மறைத்து வருகிறது என்று தெரியவில்லை. காங்கிரஸ் அரசு மறைத்துபோல் பா.ஜ.க. அரசும் மறைக்க முயற்சிக்கிறது. நேதாஜி உயிரோடு இருக்கிறார் என்ற ஆதாரம் என்னிடம் இருக்கிறது. மத்திய அரசு வெளியிடவில்லை என்றால், அந்த ஆதாரங்களை நான் வெளியிட்டு அனைவரின் முகத்திரையை விரைவில் கிழிப்பேன். இந்த ஆவணங்களில் பல உண்மைகள் வெளிவரும்.

இவ்வாறு வைகோ ஆவேசமாக பேசினார்

Leave a Reply