நேதாஜி விமான விபத்து நடந்த இரவில் என்ன நடந்தது? ஜனவரி 16-ல் முக்கிய ஆவணங்கள் வெளியீடு
கடந்த 1945ஆம் ஆண்டு ஆகஸ்டு 18ஆம் தேதி தைவானில் நடந்த விமான விபத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பலியானதாக கூறப்பட்டாலும் அதை நேதாஜியின் ஆதரவாளர்கள் மறுத்து வருகின்றனர். நேதாஜியின் மரணம் பற்றிய மர்மம் தொடர்ந்து இன்னும் நீடித்து வருகிறது.
இந்நிலையில், விமான விபத்து நடந்த நாளில் (18-8-1945) நேதாஜியின் பயணங்கள் பற்றிய ஆவணங்களை இங்கிலாந்தைச் சேர்ந்த நேதாஜியின் உறவினருமான ஆஷிஸ் ரே இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். அந்த ஆவணத்தில், ”கடந்த 70 ஆண்டுகளாக விமான விபத்தில் நேதாஜி இறந்தாரா இல்லையா என்ற சந்தேகம் இருந்து வருகிறது. இந்த சர்ச்சைக்குரிய விவகாரத்துடன் தொடர்புடைய உறுதியான தவிர்க்க முடியாத 4 தனித்தனி அறிக்கைகள் உள்ளன.
1945 ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி காலை ஜப்பான் நாட்டு விமான படையின் வெடிகுண்டு வீசுகிற வீரர் வியட்நாமின் டோரனேவில் இருந்து விமானத்தை எடுத்துள்ளார். அந்த விமானத்தில் நேதாஜி-வுடன் 12 அல்லது 13 பேர் கொண்ட குழுவினர் இருந்துள்ளனர். அதில் ஜப்பான் ராணுவத்தை சேர்ந்த லெப்டினன் ஜெனரல் சுனமாசா ஷிடை உடனிருந்தார். ஹிட்டோ, தைபை, டைரென், டோக்கியோ பாதை வழியாக அந்த விமானம் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது” இவ்வாறு அந்த இணையதளம் கூறியுள்ளது.
இதனை தொடர்ந்து வரும் ஜனவரி 16-ம் தேதியன்று நேதாஜியின் விமான விபத்தை தொடர்ந்து, 18-8-1945 அன்று இரவு நடந்த சம்பவங்கள் தொடர்பான ஆவணங்களை அந்த இணையதளம் வெளியிடப்பட திட்டமிட்டுள்ளது.
Chennai Today News: Nethaji’s another important document will release on Jan.16