நெத்திலி மீன் – அரைக் கிலோ
புளி – இரண்டு எலுமிச்சை அளவு
கடுகு – சிறிதளவு
வெங்காயம் – மூன்று
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்
தனியா தூள் – இரண்டு டீஸ்பூன்
கொத்துமல்லி – ஒரு கொத்து
கறிவேப்பிலை – இரண்டு கீற்று
எண்ணெய் – தேவையான அளவு
* மீனை சுத்தம் செய்து கழுவி கொள்ள வேண்டும்.
* புளியை நன்கு கரைத்து வடித்து கொள்ளவும்.
* இஞ்சி, பூண்டை விழுதாக அரைக்கும் போது அதனுடன் ஒரு வெங்காயத்தையும் போட்டு அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம், வெங்காயம், இஞ்சி, பூண்டு, வெங்காய விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு தக்காளி போட்டு வதக்க வேண்டும். தக்காளி வதங்கியதும் காய்ந்த மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி பிறகு புளி தண்ணீர் ஊற்றவும்.
* கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்குவதற்கு 5 நிமிடம் முன்பு நெத்திலி மீனை போட்டு இறக்கவும்.
* குழம்பில் மீனை போட்ட பிறகு கரண்டியை வைத்து வேகமாகக் கிளறக் கூடாது.
* சுவையான நெத்திலி மீன் குழம்பு தயார்.