புகார் கொடுக்க மட்டும் தெரியுது, இரங்கல் தெரிவிக்க தெரியாதா? ஸ்மிருதி இரானிக்கு நெட்டிசன்கள் கேள்வி
ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி புகார் மனு
#MakeInIndia திட்டத்தை Rape In India என்ற ராகுல் காந்தியின் பேசியது குறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி புகார் அளித்துள்ளார். இரானியின் இந்த மனு குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது
இந்த நிலையில் ஐதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டபோது ஒரு இரங்கல் கூட தெரிவிக்காத பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிருதி இரானி, இப்போது ராகுல் காந்தி மீது புகார் மட்டும் கொடுக்க தெரிகிறதா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.