எஸ்வி சேகர் கூறிய மந்திரம் தான் மருந்தா? நெட்டிசன்கள் கிண்டல்
கொரோனா வைரஸ் ஆபத்தில் இருந்து தப்பிக்க உலகமே போராடி வரும் நிலையில் அதன் சீரியஸ் கொஞ்சம் கூட புரியாமல் அதர்வண வேதத்தில் உள்ள மந்திரம் ஓதி மருந்தாக பயன்படுத்தலாம் என எஸ்வி சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
எஸ்வி சேகரின் இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து அவர்கள் ஆவேசமாக பல்வேறு கருத்துக்களை கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இருப்பினும் புனித நீர் தெளித்தல் உள்பட ஒருசிலவற்றை செய்யும் மற்ற மதத்தினர்கள் நெட்டிசன்களால் கிண்டலடிக்கப்படவில்லை என்ற ஆதங்கத்தையும் ஒருசில நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்
https://twitter.com/SVESHEKHER/status/1242686783973818368