இது என்ன ஜெயலலிதா படமா? தீபா படமா? நெட்டிசன்கள் கிண்டல்
முன்னாள் தமிழக முதல்வர் மறைந்த செல்வி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்திற்கு ‘தலைவி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே
இந்த திரைப்படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத் மற்றும் எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்தசாமி ஆகியோர் நடித்து வரும் நிலையில் இன்று மாலை இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது
இந்த போஸ்டரை பார்த்த பெரும்பாலான நெட்டிசன்கள் இது ஜெயலலிதா போலவே தெரியவில்லையே என கமெண்ட் அளித்து வருகின்றனர். ஒருசில குறும்புக்கார நெட்டிசன்கள் இந்த படம் உண்மையில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படம் தானா? அல்லது தீபா வாழ்க்கை வரலாறு படமா? என்று கிண்டலடித்துள்ளனர்.
ஒரு பெரிய தலைவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை உருவாக்கும்போது சரியான நட்சத்திரத்தை தேர்வு செய்துவிட்டால் பாதி வெற்றி கிடைத்து விடும். காந்தி வாழ்க்கை வரலாறு படத்தில் இருந்து தோனி வாழ்க்கை வரலாறு படம் வரை அதுதான் திரையுலகில் நடந்துள்ளது. தலைவி படம் வெற்றிப்படமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்