விரைவில் வெளிவருகிறது பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய 1000 ரூபாய் நோட்டு

விரைவில் வெளிவருகிறது பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய 1000 ரூபாய் நோட்டு

currencyபெருகி வரும் இந்திய கரன்சிகளின் கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தற்போது மேம்படுத்தப்பட்ட உயரிய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த புதிய 1000 ரூபாய் நோட்டில் சின்னத்துடன் எல் என்ற ஆங்கில எழுத்து இணைக்கப்பட்டு வெளியாகும். எண்களின் அளவு ஏறுவரிசையில் இருக்கும். பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த அம்சங்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கியின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எண்களை சிறிய வடிவத்தில் ஆரம்பித்து பெரிய எழுத்தில் முடிக்கும்  இத்தகைய யுக்தி ஏற்கனவே 100 ரூபாய் நோட்டுக்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply