ஸ்மார்ட்போனை வைத்துக்கொண்டு சுயபடங்களை எடுப்பதில் மட்டும் மகிழ்ந்தால் போதுமா? ஸ்மார்ட்போன் கேமரா மூலம் வீடியோ தொகுப்பையும் எடுக்கலாம் இல்லையா? இப்படி போனில் எடுத்த வீடியோவை அப்படியே பதிவேற்றுவதைவிட கொஞ்சம் நன்றாக எடிட் செய்து மெருகேற்றிய பின் வெளியிடலாம். ‘வீடியோஷோ’ செயலி இதற்கு உதவுகிறது.
வீடியோ படங்களை எடிட் செய்வது, அவற்றில் பின்னணி இசை சேர்ப்பது, ஃபில்டர்களைப் பயன்படுத்துவது போன்றவற்றை இந்தச் செயலி மூலம் செய்து கொள்ளலாம். அவற்றில் பொருத்தமான ஸ்டிக்கர்களையும் சேர்த்து பின்னர் யூடியூப், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் முலம் பகிர்ந்து கொள்ளலாம். காட்சிகளில் ஜூம் செய்யும் வசதியும் இருக்கிறது.
குறும்படமோ, விளம்பரப் படமோ எடுத்துப்பார்க்கும் ஆசை இருந்தால் இந்தச் செயலி மூலம் முயன்று பாருங்கள். நீங்களும் கூட வீடியோவில் கதை சொல்லலாம்.
ஆண்ட்ராய்டில் தரவிறக்கம் செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.xvideostudio.videoeditor&hl=en