ஆசிய-ஆப்பிரிக்க கண்டத்தை இணைக்கும் கடல் பாலம். சவுதி அரேபியா மன்னர் முடிவு
சவுதி அரேபியா மற்றும் எகிப்து ஆகிய இரு நாடுகளை இணைக்கும் வகையில் செங்கடலின் குறுக்கே புதிய பாலம் கட்டப்படும் என சவுதி அரேபியா மன்னர் சல்மான் தெரிவித்துள்ளார். இதனால் இருநாடுகளின் வணிகம் பெருமளவு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எகிப்து நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட புரட்சிக்கு பின்னர் ஜனநாயக முறைப்படி முகமது முர்சி புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் சவுதி அரேபியாவுக்கும், எகிப்துக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. கடந்த 2013ஆம் ஆண்டில் மோர்சி பதவி நீக்கம் செய்யப்பட்டு ராணுவ தளபதி அப்துல் பதே அல்– சிசி புதிய அதிபரானார். அதை தொடர்ந்து தற்போது சவுதி அரேபியாவுக்கும் எகிப்துக்கும் இடையே மீண்டும் நட்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நட்பின் அடிப்படையில் சவுதி அரேபியா மன்னர் சல்மான் சமீபத்தில் எகிப்து நாட்டிற்கு விஜயம் செய்தார். அவரை தலைநகர் கெய்ரோவில் எகிப்து அதிபர் சிசி சிறப்பான முறையில் வரவேற்றார். பின்னர் இரு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார் கள். இதையடுத்து சவுதிஅரே பியா மற்றும் எகிப்து ஆகிய இரு நாடுகளை இணைக்கும் வகையில் செங்கடல் குறுக்கே புதிய பாலம் ஒன்று கட்டப்படும் என மன்னர் சல்மான் அறிவித்தார்.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த பாலம் கட்டப்பட்டால் ஆப்பிரிக்கா – ஆசியா கண்டங்கள் இணைக்கப்படும் சாதனை நிகழும். மேலும் சவுதி அரேபியா – எகிப்து இடையே வர்த்தக உறவு மேம்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்படும் பாலத்துக்கு மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஷ் பாலம் என பெயர் வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.