பலத்த எதிர்ப்பையும் மீரி நிர்பயா பாலியல் வழக்கின் சிறார் குற்றவாளி விடுதலை
டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மூன்று வருடம் சிறைத்தண்டனை அனுபவித்த சிறார் குற்றவாளி நேற்று விடுதலை செய்யப்பட்டார். இந்த குற்றவாளியின் விடுதலையை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த் வழக்கில் தீர்ப்பு கூறிய நீதிபதி, ‘தண்டனை காலம் முடிந்த சிறுவனை விடுவிக்காமல் இருக்க முடியாது என்று கூறி சுப்பிரமணியன் சுவாமியின் மனுவை நிராகரித்தார்.
நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நிர்பயாவின் பெற்றோர் கருத்து வெளியிட்டனர். மேலும், பல்வேறு அமைப்பினரும் இளம் குற்றவாளியை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று முன் தினம் ரகசிய இடத்திற்கு இளங்குற்றவாளி கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில், நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் இளம் குற்றவாளி விடுவிக்கப்பட்டு விட்டதாகவும், மேலும், அவர் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் கண்காணிப்பில் பராமரிக்கப்படுவார் என்றும் ஜெயில் அதிகாரியிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதற்கிடையே, டெல்லி மகளிர் ஆணையம் சார்பில், இளம் குற்றவாளி விடுதலைக்கு தடை கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary: New Delhi gang-rape convict released