தமிழக விவசாயிகள் போராட்டம் வாபஸ். 41 நாட்கள் வீண்

தமிழக விவசாயிகள் போராட்டம் வாபஸ். 41 நாட்கள் வீண்

தமிழக விவசாயிகள் கடந்த 41 நாட்களாக டெல்லியில் போராடியும் எந்தவித பயனும் இல்லாமல் தங்கள் போராட்டத்தை முடித்து கொண்டனர். இன்னும் எத்தனை நாள் முதல்வர் பதவியில் இருப்பார் என்பது அவருக்கே தெரியாத நிலையில் எடப்பாடி பழனிச்சாமியுடன் பேச்சுவார்த்தை நடத்திய விவசாயிகள் தங்கள் போராட்டத்தை முடித்து கொண்டதாக அறிவித்துள்ளனர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; நதிகளை ஒன்றிணைக்க வேண்டும்; வறட்சி பாதித்துள்ள விவசாயிகளின் வங்கிக் கடன்களை ரத்து செய்ய வேண்டும்; வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த மார்ச் 14ம் தேதி போராட்டம் தொடங்கியது.

போராட்டம் தொடங்கிய நாள் முதல் நேற்று வரை பிரதமர் மோடி உள்பா மத்திய அரசு இந்த போராட்டத்தை கண்டுகொள்ளவில்லை. அதே நேரத்தில் போராட்டத்தை கலைக்கவும் எந்த வித முயற்சியும் செய்யவில்லை. தானாகவே போராட்டம் முடிவுக்கு வரும் என்று மத்திய அரசு எதிர்பார்த்தபடியே நேற்று முடிவுக்கு வந்துள்ளது

தலைநகர் டெல்லியில் இவ்வளவு நாட்களாகப் போராடிய விவசாயிகளை இறுதிவரையும் பிரதமர் மோடி அல்லது மூத்த அமைச்சர்கள் யாருமே நேரில்வந்து சந்திக்கவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மட்டுமே மரியாதை நிமித்தமாக விவசாயிகளைச் சந்தித்துப் பேசினார். இந்த நிலையில் நேற்று முதல்வர் பழனிச்சாமி பிரதமரை சந்திக்க நடவடிக்கை எடுப்பேன் என, உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

Leave a Reply