கின்னஸ் சாதனை படைக்கவிருக்கும் புதுடில்லி யோகா நிகழ்ச்சி?

yoga dayமுதலாவது சர்வதேச யோகா தினம் இன்று காலையில் புதுடெல்லியில் நடந்த பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றில் அனுசரிக்கப்பட்டது. இந்த யோகா நிகழ்ச்சியில் 40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் பேர் வரையில் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திரமோடி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட முக்கிய தலைவர்கள் இந்த யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்ச்சி ஒரே இடத்தில் 45 ஆயிரம் பேர் யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ளதால் உலக சாதனையாக கின்னஸ் சாதனை ஏட்டில் பதிவு செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை கண்காணிக்க கின்னஸ் சாதனை நிறுவன அதிகாரிகள் வருகை தந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் உள்ள சிவாஜி பல்கலைக்கழகத்தில் கன்னியாகுமரியை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் கடந்த 2005ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்த யோகா நிகழ்ச்சியில் 29 ஆயிரத்து 973 பேர் கலந்து கொண்டதே கின்னஸ் உலக சாதனையாக பதிவாகி உள்ளது.

இன்றைய யோகா நிகழ்ச்சியில் 50 நாட்டினர் கலந்து கொள்வது மற்றொரு உலக சாதனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 45 நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்வதை உறுதி செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply