நாளை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாக்குமா என்பது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசு அவர்கள் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்க கடல் முதல் தமிழக கடலோர பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கரையை நெருங்க கூடும்
இதனால் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.