பார்வை சாவலுடையவர்களுக்கு சாலையில் செல்ல புதிய சாதனம்
பார்வை சவாலுடைய மாற்றுத்திறனாளிகள் யாருடைய துணையும் இன்றி சாலையில் நடந்து செல்ல புதிய சாதனத்தை பிரான்ஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது.
அவர்கள் இச்சாதனத்தை தோள்பட்டையில் பொருத்திக் கொண்டால், அதில் இருக்கும் 3டி கேமரா மூலம் சாலையிலுள்ள தடை, தடுப்புகளை கண்டறிந்து ஹெட்ஃபோன் மூலம் வழிகாட்டும்.
இதன் மூலம் கைத்தடியின்றி மற்றவர்களை போல இயல்பாக இருக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.