தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருந்த ராமானுஜத்தின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்ததையொட்டி, அவருக்கு பதிலாக புதிய டி.ஜி.பி.யாக அசோக்குமார் இன்று பதவி ஏற்றுக் கொண்டார். புதிய டிஜிபியாக பதவியேற்றுக்கொண்ட அசோக்குமார் சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில், போலீசார் அளித்த அணி வகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.
தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக பதவி ஏற்றுள்ள அசோக்குமார், மதுரை திருமங்கலத்தில் ஏ.எஸ்.பி.யாக பணியாற்றியவர். பின்னர், திருச்சி எஸ்.பி.யாக பதவி வகித்து தென்சென்னை துணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். அதன் பின்னர் சி.பி.ஐ.க்கு சென்று அங்கு 7ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
சில வருடங்களுக்கு பின்னர் மீண்டும் தமிழக காவல்துறை பணிக்கு திரும்பிய அசோக் குமார் ஊழல் கண்காணிப்புத்துறை இணை இயக்குனராக பதவி வகித்தார். அதன் பின் மீண்டும் சி.பி.ஐ.க்கு திரும்பிய அவர் தற்போது தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக பதவியேற்றுள்ளார்.