கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதலுக்கு சவுதி அரேபியா நாட்டின் அரச குடும்பம் நிதி கொடுத்து உதவியதாக தற்போது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. உலகையே நடுங்க செய்த இத்தாக்குதலில் ஈடுபட்ட அல்கொய்தா தீவிரவாதிகளின் முக்கிய குற்றவாளியான ஷகாரியாஸ் மொசாய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்தத் தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியவர்களில் இவரும் ஒருவர்.
நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இவர் தற்போது அமெரிக்காவின் கொலோரபோவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்றபோது இவர் ஒரு வாக்கு மூலம் அளித்தார்.
அதில் அமெரிக்காவில் கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நடந்த தாக்குதலுக்கு சவூதி அரேபிய மன்னர் குடும்பத்தின் முக்கிய அதிகாரிகள் ஒரு பெரும் தொகையை நிதியாக கொடுத்து உதவி செய்ததாக கூறியுள்ளார். இவர் கூறிய இந்த வாக்குமூலம் தற்போதுதான் வெளியே கசிந்துள்ளது.
ஆனால் இந்த தகவலை சவூதி அரேபியா அரசு திட்ட வட்டமாக மறுத்துள்ளது. இந்த விவகாரத்தில் சவூதி அரேபிய அரசுக்கோ, அதிகாரிகளுக்கோ, மன்னர் குடும்பத்துக்கோ எந்த வித தொடர்பும் இல்லை. அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று மறுத்துள்ளது.