சென்னையில் வெள்ளத்தால் பாஸ்போர்ட் இழந்தவர்களுக்கு கட்டணமின்றி புதிய பாஸ்போர்ட். சுஷ்மா ஸ்வராஜ்
மழை மற்றும் வெள்ளத்தால் பொதுமக்கள் தங்கள் பாஸ்போர்ட்டுக்களை இழந்திருந்தாலோ அல்லது சேதமடைந்திருந்தாலோ புதிய பாஸ்போர்ட்டுக்களை பெற்றுக்கொள்ளலாம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்.
சென்னை மழை, வெள்ளத்தால் பாஸ்போர்ட்டுக்களை இழந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களை தொடர்பு கொண்டால் அவர்களுடை விபரங்கள் சரிபார்க்கப்பட்டு உடனடியாக புதிய பாஸ்போர்ட்டுக்களை எவ்வித கட்டணமும் இன்றி விநியோகம் செய்யப்படும் என்றும் இதற்காக பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகளுக்கு தான் உத்தரவிட்டுள்ளதாகவும் சுஷ்மா தெரிவித்துள்ளார்.
அவர் தன்னுடைய டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
If your passport is lost or damaged in floods, pl go to any of three PSKs in Chennai. They will issue u fresh passport free of charge. Pl RT
English Summary: New fresh passport for lost or damaged passport holders in Chennai Floods