முக்கிய அரசாணை வெளியிட தமிழக அரசு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் தள்ளிவைக்கப்பட்டது முன்னதாக ஜூன் ஒன்றாம் தேதி நடத்த வேண்டிய இந்த பொதுத் தேர்வு தற்போது ஜூன் 15-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது
இந்த தேர்வுக்கான ஆயத்தப் பணிகளை தமிழக அரசு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு குறித்து முக்கிய அரசாணை ஒன்றை தமிழக அரசு வெளியீட்டுள்ளது
அதில் மாணவர்களுக்கு காலை மாலை என இருவேளைகளிலும் உடல் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும் உடல்நிலை குறித்த விவரங்களை பதிவேட்டில் குறிப்பிடப்பட வேண்டும் என்றும் அளவுக்கு அதிகமான காய்ச்சல் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது