புளூட்டோ கிரகத்தில் 11,000 அடி உயரமுடைய மலைகள். நாசா விஞ்ஞானிகள் ஆச்சரியம்

plutoபூமியில் இருந்து மிக தொலைவில் இருக்கும் கிரகமான புளூட்டோவுக்கு நாசா அனுப்பிய விண்கலம், புளூட்டோ கிரகத்துக்கு மிக அருகில் சென்று ஆச்சரியகரமான பல சிக்னல்களையும் புகைப்படங்களையும் அனுப்பியுள்ளது. இந்த புகைப்படங்கள் புளூட்டோ கிரகம் குறித்த ஆய்வுக்கு பெரிதும் பயன்படும் என கருதப்படுகிறது.

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அனுப்பிய நியூ ஹரைசன்ஸ் என்ற விண்கலம் புளூட்டோ கிரகத்துக்கு அருகில் சென்று ஆச்சரியகரமான பல சிக்னல்களை அனுப்பி வருகிறது. அந்த சிக்னல்கள் மற்றும் புகைப்படங்கள் மூலம் புளூட்டோவில் 11,000 அடி உயரமுடைய மலைத்தொடர்கள் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். 4.56 பில்லியன் ஆண்டுகள் பழமையான சூரிய குடும்பத்தில் புளூட்டோ 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் உருவானதாக கருதப்படுகிறது.

நாசாவின் விண்கலம் தற்போது புளூட்டோவின் மிகப்பெரிய சந்திரனான கேரான் என்பதன் படங்களையும் அனுப்பி வருகிறது. புளூட்டோ எதிர்பார்த்ததைவிட சற்று பெரிதான கிரகமாக இருப்பதால், புவியீர்ப்பு ஊடியக்கங்கள் மூலம் உஷ்ணப்படுத்த முடியாததாக உள்ளது. எனவே புளூட்டோவில் மலைகள் உருவாக்கம் வேறு பல நிகழ்வுகளால் சாத்தியமாகியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பனிபடந்த கிரகங்களில் நிலவியல் நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கலாம் என்பது பற்றிய புதிய சிந்தனைகளை இந்த புளூட்டோ கண்டுபிடிப்புகள் உருவாக்கியுள்ளன.

Leave a Reply