வங்கக்கடலில் 30ஆம் தேதி மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வா?

வங்கக்கடலில் ஏற்கனவே 3 காற்றழுத்த தாழ்வு தோன்றியுள்ள நிலையில் வரும் 30ஆம் தேதி தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய காற்றழுத்த தாழ்வு 48 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடையும் என்றும் இதன் காரணமாக மீண்டும் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.