நேபாளத்தின் புதிய பிரதமரை தேர்வு செய்ய நாளை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு.
நேபாளம் நாட்டில் புதிய அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து அந்நாட்டின் பிரதமராக இருந்த சுஷில் குமார் கொய்ராலா தனது பதவியை ராஜிநாமா செய்யவுள்ளார். இதனால் புதிய பிரதமரை தேர்வு செய்யும் முயற்சியில் அந்நாட்டு அரசியல் கட்சிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
ஆனால் புதிய பிரதமரை தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதனால் புதிய பிரதமரைத் தேர்வு செய்வதற்காக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வரும் நாளை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து நேபாளத்தைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளையும், புதிய பிரதமரை தேர்வு செய்ய வாக்கெடுப்புக்கான நடவடிக்கைகளை தொடங்கும்படி நேபாள அதிபர் டாக்டர் ராம் பரண் யாதவ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து நேபாள நாடாளுமன்றத் தலைவர் சுபாஷ் நெபாங் கூறுகையில், “பிரதமரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறும். பிரதமர் பதவிக்கு போட்டியிட விரும்பும் அரசியல் கட்சிகள், அப்பதவிக்கு தங்களது கட்சியின் பிரதிநிதியின் பெயரை இன்று மாலைக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நேபாள நாட்டின் புதிய பிரதமர் யார்? என்பதை தெரிந்து கொள்ள அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி இந்திய மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.