திருப்பதியில் தங்கும் அறையை முன்பதிவு செய்ய புதிய வசதி

திருப்பதியில் தங்கும் அறையை முன்பதிவு செய்ய புதிய வசதி

நாடெங்கிலும் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து வழிபடும் திருமலை திருப்பதியில் வாடகை அறையை முன்பதிவு செய்ய இம்மாதம் 12 முதல் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

உலகின் மிக பணக்கார கோவில்களில் ஒன்றான திருப்பதியில் பக்தர்கள் தங்குவதற்கு குறைந்த வாடகையில் தேவையான அறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்த அறைகளை பதிவு செய்ய பக்கதர்கள் பல மணிநேரம் வரிசையிலேயே காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது.

இந்தநிலையை தவிர்க்க புதிய வசதி ஒன்றை திருப்பதி தேவஸ்தானம் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய வசதிப்படி , திருப்பதி தேவஸ்தானம் மத்திய விசாரணை அலுவலகத்தில் பத்து அறைகள் திறக்கப்படும் . அறைகள் தேவைப்படுவோர் அங்கு சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம்.

முன்பதிவு செய்த நபர்கள் வரிசையில் நிற்கவேண்டிய அவசியமில்லை .அவர்களது மொபைல் எண்ணுக்கே எஸ்.எம்.எஸ் மூலமாக காலி அறை பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படும். ஜுலை 12-ம் தேதி முதல் இந்த முறை அமல்படுத்தப்பட உள்ளது.

Leave a Reply