ஜனவரி 1 முதல் புதிய ரூ.1000 நோட்டு அறிமுகமா?
பாரத பிரதமர் நரேந்திரமோடி கடந்த மாதம் 8ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று அறிவித்தார். இவ்வாறு செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கியில் மாற்றி கொள்ள இன்று கடைசி தினம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாளை தொலைக்காட்சியில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இந்த உரையில் பல புதிய அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவற்றில் ஒன்று புதிய 1000 ரூபாய் நோட்டுக்கள் ஜனவரி 1 முதல் அறிமுகப்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட ரூ.2000 நோட்டுக்கு சில்லரை மாற்றுவது பெரும் சவாலாக உள்ளது. ரூ.500 நோட்டு அறிமுகப்படுத்தியபோதிலும் போதிய அளவில் கிடைக்கவில்லை என்பதால் சில்லரை தட்டுப்பாட்டை போக்க மீண்டும் புதிய ரூ.1000 நோட்டு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது.