புழக்கத்திற்கு வந்த புதிய ரூ.500 நோட்டு. சில்லறை தட்டுப்பாடு தீருமா?

புழக்கத்திற்கு வந்த புதிய ரூ.500 நோட்டு. சில்லறை தட்டுப்பாடு தீருமா?

500ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8ஆம் தேதி அறிவித்ததை அடுத்து ஏழை எளியோர் முதல் பணக்காரர்கள் வரை தங்களிடம் உள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்ற வங்கியை நோக்கி படையெடுத்தனர்.

அவர்களுக்கு மாற்றாக புதிய ரூ.2000 மற்றும் ரூ.100கள் மட்டும் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் ரூ.2000 நோட்டு வழங்கப்பட்டும் அதை மாற்ற முடியாத காரணத்தால் பணம் கையில் இருந்தும் உபயோகப்படுத்த முடியாமல் பொதுமக்கள் திணறினர்.

இந்நிலையில் இன்று முதல் ரூ.500 புதிய கரன்ஸி புழக்கத்திற்கு வந்துள்ளது. எனவே இனிமேல் பணத்தட்டுப்பாடு படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் பொதுமக்களின் சில்லரை தேவைக்காக 20,50, 100 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் அச்சடிக்கப்பட்டு வருவதாகவும், இன்னும் ஒருசில நாட்களில் அவை மக்களின் பயன்பாட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் என்ரும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Leave a Reply