91 ஆண்டுகளுக்கு பின்னர் ஆர்.எஸ்.எஸ்.சீருடையில் மாற்றம்
இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் ஆர்.எஸ்.எஸ். பிரதமர் நரேந்திரமோடி சிறுவயதில் இந்த இயக்கத்தின் உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த இயக்கத்தில் கடந்த 91 ஆண்டுகளாக காக்கி டிரவுசர் சீருடையாக இருந்த நிலையில் தற்போது டிரவுசருக்கு பதிலாக பேண்ட்டும், காக்கிக்கு பதிலாக பிரெளன் கலரும் மாற்றப்பட்டுள்ளது. வரும் விஜயதசமி தினம் முதல் இந்த மாற்றம் இருக்கும் என்றும் வெள்ளை சட்டையில் எவ்வித மாற்றமும் இருக்காது என்றும் கூறப்படுகிறது
இதுகுறித்து ஆர்எஸ்எஸ் உறுப்பினரும், சிந்தனையாளருமான திலீப் தியோதர் கூறும்போது, “இந்தச் சீருடையில் இருந்து யாருக்கும் விலக்கில்லை. ஆர்எஸ்எஸ் தலைவரும்கூட இச்சீருடையை அணிய வேண்டும்” என்று கூறிய அவர் “டிரவுசருக்கு பதிலாக பேண்ட் மாற்றும் திட்டம் 2010-லேயே இருந்தது. ஆனால், அப்போது அந்த திட்டம் குறித்த தகவல் ஊடகங்களில் கசிந்துவிட்டது. அதனால் அப்போது அந்த முடிவை கைவிட்டோம். தற்போது அந்தத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம்” என்றும் கூறினார்.