சென்னையில் புதிய ரன் வே! 1 மணிநேரத்தில் 50 விமானம் இயக்க முடிவு!

சென்னை விமான நிலைய பயணிகளின் வசதிக்கேற்ப அதிநவீனப்படுத்தி, கால விரயத்தை குறைக்கும் வகையிலான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்கு தற்போது 30 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதை தற்போது 50 விமானங்களாக உயர்த்துவது குறித்து விமான நிலைய நிர்வாகம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சென்னை விமான நிலையத்தில் இருந்து வரும் 2 (ரன்வே) ஓடுபாதைகளையும் ஒரே நேரத்தில் இயக்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருன்றன.