கவர்ச்சிக் கண்களை வெளியே காட்ட தடை. சவுதி அரேபிய பெண்களுக்கு திடீர் கட்டுப்பாடு.

sexy-eyesசவுதி அரேபிய நாட்டில் வாழும் பெண்களுக்கு ஏற்கனவே பலவித கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் தற்போது புதிதாக கவர்ச்சியான கண்களை உடைய பெண்கள் கண்களையும் பர்தா போட்டு மூடவேண்டும் என புதிய உத்தரவு இடப்பட்டுள்ளதால் பெண்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் கவர்ச்சியான கண்கள் உள்ள பெண்கள் அதை வெளியில் காட்ட தடை விதிக்கும் புதிய சட்டம் ஒன்று சமீபத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி இனிமேல் கவர்ச்சியான கண்கள் உள்ள பெண்கள் அதை மறைக்கும் வகையில் கண்டிப்பாக பர்தா அணிந்து வரவேண்டும். இந்த தடையை மீறும் பெண்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டதிற்கு பெண்கள் அமைப்புகள் தங்களுடைய சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் இது குறித்து சவுதி அரசின் நல்லொழுக்க மேம்பாடு மற்றும் தீயவை தடுப்பு குழுவின் செய்தித் தொடர்பாளர் ஷஏக் மோத்லப் அல் நபத் கூறுகையில், கவர்ச்சியான கண்கள் உடைய பெண்களிடம் அதனை மறைக்குமாறு கூற குழு உறுப்பினர்களுக்கு அதிகாரம் உள்ளது என்றும் இந்த தடை பெண்களின் பாதுகாப்பிற்க்காகத்தான் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுளார்.

Leave a Reply