தமிழகத்தின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சந்தீப் சக்சேனா அவர்கள் நேற்று திடீரென நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை இந்த பதவியில் இருந்த பிரவீன்குமாருக்கு பதிலாக சந்தீப் சக்சேனாவை தமிழக அரசு இன்று நியமி்த்து உத்தரவிட்டுள்ளது.
இதுவரை தமிழக வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மை செயலாளராக இருந்த சந்தீப் சக்சேனா அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு செய்தி குறிப்பு ஒன்று கூறியுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போது 144 தடை உத்தரவு போட்டு சர்ச்சைக்குள்ளானதால் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.