சென்னையில் இன்று முதல் புதிய மின்சார ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி அரக்கோணம் – சென்னை கடற்கரை, சூளூர்பேட்டை – சென்னை கடற்கரை மின்சார ரயில்கள் இனி வேளச்சேரி வரை செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்னக ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேளச்சேரி வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள்:
ரயில் எண் 42750: பொன்னேரி – சென்னை கடற்கரை- காலை 7 மணி
ரயில் எண் 43650: ஆவடி – சென்னை கடற்கரை- காலை 7.30 மணி
ரயில் எண் 43932: அரக்கோணம் – சென்னை கடற்கரை- காலை 7
ரயில் எண் 42850: சூளூர்பேட்டை – சென்னை கடற்கரை- காலை 7.25
வேளச்சேரியில் இருந்து திருத்தணி, அரக்கோணம், ஆவடி வரை செல்லும் ரயில்கள்
ரயில் எண் 43941: காலை 11.20 -வேளச்சேரி – சென்னை கடற்கரை ரயில் திருத்தணிக்கு பிற்பகல் 2.40 மணிக்கு சென்றடையும்.
ரயில் எண் 43931: மாலை 5.15 மணிக்குப் புறப்படும் வேளச்சேரி – சென்னை கடற்கரை ரயில் அரக்கோணம் இரவு 8.05 மணிக்குச் சென்றடையும்.
ரயில் எண் 43651: இரவு 7.30 மணிக்குப் புறப்படும் வேளச்சேரி – சென்னை கடற்கரை ரயில் இரவு 8.10 மணிக்கு ஆவடி சென்றடையும்.
ரயில் எண் 41126: இரவு 8.50 மணிக்குப் புறப்படும் வேளச்சேரி – சென்னை கடற்கரை ரயில் இரவு 10.30 மணிக்கு ஆவடி சென்றடையும்.