ராம்குமார் வழக்கில் திடீர் திருப்பம். வழக்கில் இருந்து திடீரென விலகிய வழக்கறிஞர்
சுவாதி கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமாருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வழக்குரைஞர் மகேந்திரன் தாக்கல் செய்துள்ளார். ஆனால் இந்த வழக்கு விசாரணையின்போது ராம்குமார் சார்பில் வழக்கறிஞர் ஜி.கிருஷ்ணமூர்த்தி ஆஜரானார். ஆனால் திடீரென அவர் தற்போது , தனக்கு வேலைப்பளு அதிகம் இருப்பதால் இந்த வழக்கில் இருந்து விலகுவதாக தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் இந்த வழக்கு பரபரப்பு அடைந்துள்ளது.
மேலும் போலீசார் தரப்பு இந்த ஜாமீன் மனு ராம்குமாருக்கு தெரியாமலேயே விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
போலீசாரின் சந்தேகத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி இந்த ஜாமீன் மனு ராம்குமாருக்கு தெரியாமலேயே தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று அரசு தரப்பு சந்தேகம் எழுப்பியுள்ளதால், முதலில் இதுகுறித்து மனுதாரர் வழக்கறிஞர் தெளிவுப்படுத்தவேண்டும் என்றும் இந்த மனு மீதான விசாரணையை வருகிற 15ம் தேதி தள்ளிவைப்பதாகவும் உத்தரவிட்டார்.