வாட்ஸ் அப்பில் திட்டினால் ரூ.44 லட்சம் அபராதம். துபாய் அரசு அதிரடி அறிவிப்பு

whatsappபிரபல சமூகவலைத்தளங்களான ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் போன்றவற்றில் ஆக்கபூர்வமான முறைகளுக்கு பயன்படுத்துவதை விட பெரும்பாலானோர் மற்றவர்களை திட்டுவதற்கே அதிகம் பயன்படுத்தப்படுவதாக பெரும்பாலானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் துபாயில் இதற்கென ஒரு புதிய சட்டம் அமைக்கபட்டுள்ளது. வாட்ஸ் அப் உள்பட சமூக வலைத்தளங்களின் மூலம் யாரையாவது திட்டினால் ரூ.44 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் நாடுகளில் ஒன்றாக கருதப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக நாடு முழுவதும் இலவச வைபை வசதியை பயன்படுத்தும் திட்டத்தை சமீபத்தில் கொண்டு வந்துள்ளது. ஆனால் இதை பயன்படுத்தி வாட்ஸ் மூலம் மற்றவர்களை திட்டுவது, அந்நாட்டைப் பற்றி மோசமான விஷயங்களை பகிர்ந்து கொள்வது போன்றவற்றை பலர் செய்து வருவதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு சர்வே முடிவு கூறியுள்ளது.

இதனையடுத்து தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசு உத்தரவின்படி வாட்ஸ்அப் மூலமாக இனிமேல் யாரையாவது திட்டினால் 2.5 லட்சம் திர்ஹம் வரை (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 44 லட்சம்) அபராதம் விதிக்க முடியும். மேலும் குற்றம் கடுமையானதாக இருக்கும் பட்சத்தில் நாடுகடத்தப்படவும் வாய்ப்புள்ளது. எனவே, தூபாய் செல்பவர்கள், சமூக வலைத்தளங்களை கையாளும்போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

Leave a Reply