2030-க்குள் சந்திரனில் புதிய கிராமங்கள். விஞ்ஞானிகள் உறுதி
செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேறுவது குறித்து திட்டங்கள் தயாராகி வரும் நிலையில் அதற்கு முன்பாகவே சந்திரனின் மக்களை சந்திரனில் மக்களை குடியமர்த்தும் நடவடிக்கைகள் தொடங்கி விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஏற்கனவே நீல் ஆம்ஸ்ட்ராங் உள்பட ஒருசில சந்திரனில் காலடி எடுத்து வைத்த நிலையில் அங்கு புதிய கிராமங்களை உருவாக்க விஞ்ஞானிகள் தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் ஐரோப்பிய யூனியன் ஏஜென்சி ஒன்று சந்திரன் 2020–2030 என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய விஞ்ஞானிகள் மற்றும் தொழில் நுட்ப வல்லுனர்கள் வரும் 2030–ம் ஆண்டிற்குள் சந்திரனில் கிராமங்கள் உருவாக்கப்படும் என்றும் அதற்கான உறுதியான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினர். அதற்கான பரீட்சார்ந்த பரிசோதனைகள் மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்றனர்.