மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
இந்த 2015 ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டில் ஜூலை மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் எதிர்பார்த்த வருமானங்களைக் காண்பீர்கள். வீண் விரயங்களும் செலவுகளும் குறையத் தொடங்கும். உற்றார் உறவினர்களும் நண்பர்களும் உங்களின் தன்னம்பிக்கையை கூட்டுவார்கள். அவ்வப்போது உடலாரோக்கியத்தில் சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் வைத்தியத்தின் மூலம் சரியாகி விடும்.
குடும்பத்தினருடன் வெளியூர் சென்று சுப காரியங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். மேலும் மகிழ்ச்சியுடன் சுற்றுலா சென்று கவலைகளை மறக்க முயல்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக சிறிது செலவு செய்ய நேரிடும். வழக்குகள் முடிவதற்குச் சற்று காலதாமதமாகலாம். புதிய வாகனங்கள் வாங்கும் எண்ணத்தை தள்ளிப்போடவும்.
அரசுவழிச் சலுகைகள் கிடைக்க சிறிது காலதாமதமாகலாம். மேலும் வெளிவட்டாரத்தில் உங்கள் பெயர், புகழ் வளரத் தொடங்கும். புதிய பொறுப்புகளையும் தவிர்க்க முடியாது. அதோடு வெளியூரிலிருந்து வரும் செய்திகள் சுபச் செய்திகளாக அமையும். எவரையும் பகைத்துக் கொள்ளாமல் பக்குவமாய் பேசுவது நல்லது.
மேலும் எவருக்கும் கடன் கொடுப்பதோ முன் ஜாமீன் போடுவதோ கூடாது. ஆகஸ்ட் மாதம் முதல் ஆண்டு இறுதிவரையில் உள்ள காலகட்டத்தில் நெடுநாளாக கிடப்பில் போடப்பட்டிருந்த உங்கள் விண்ணப்பம் அரசாங்கத்தால் சாதகமாக முடிவெடுக்கப்பட்டு வருமானம் வரத் தொடங்கும். உடலாரோக்கியத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது.
புதிய வீடு மனை வாங்க முற்படுவீர்கள். தெய்வ பலத்தால் செயற்கரிய சாதனைகளையும் செய்வீர்கள். பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுவீர்கள். பகைமை பாராட்டுபவர்களையும் உங்கள் வசப்படுத்திக் கொள்வீர்கள். கஷ்டங்களிலிருந்து கற்றுக் கொண்ட அனுபவங்களை தக்க சமயத்தில் பயன் படுத்திக்கொள்வீர்கள். உற்றார் உறவினர்கள் உங்கள் வளர்ச்சியைக் கண்டு ஆச்சரியப்படுவார்கள். ஆலயங்களுக்கும் தர்ம காரியங்களுக்கும் சிறிது செலவு செய்வீர்கள். உங்களுக்குக்கீழ் வேலை செயபவர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள்.
அதேநேரம் அதிகமான பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் உழைப்பிற்கதிகமாகவே பலன் கிடைக்கும். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்னைகள் அகலும். வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். புதிய சேமிப்புகளிலும் சேர்வீர்கள். முக்கிய முடிவுகளை நன்கு சிந்தித்து எடுப்பீர்கள். உங்களின் கற்பனை பயங்களுக்கும் விடை கொடுக்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை அதிகரித்தாலும் அவற்றைச் செய்வனே செய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். சக ஊழியர்களும் உங்களுக்கு நேசக்கரம் நீட்டுவார்கள். ஆனாலும் பயணங்களால் அனுகூலமான திருப்பங்களைக் காணமுடியாது. அதேநேரம் பயணங்களைத் தவிர்க்கவும் முடியாது. மற்றபடி உங்கள் கௌரவத்திற்கு எந்தவிதமான இழுக்கும் வராது.
வியாபாரிகளுக்கு கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் சீராக இருந்தாலும் கூடுதல் அக்கறையோடு வியாபாரம் செய்யவும். அதோடு மறைமுக எதிர்ப்புகள் உருவாக வாய்ப்பு இருப்பதால் புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடவும். அதேநேரம் நண்பர்களிடம் கவனமாக இருக்கவும். மற்றபடி போட்டிகளுக்கு ஏற்றவாறு விலையை நிர்ணயித்து பொருள்களை விற்பனை செய்வீர்கள்.
விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். இதனால் கொள்முதல் பொருள்களை விற்று நல்ல லாபத்தைப் பார்ப்பீர்கள். குறிப்பாக விவசாயத்தில் பயிர் சுழற்சி முறையை பின்பற்றுவார்கள். மேலும் நல்ல பலனைப் பெறுவார்கள். அதோடு நீர் பாசனத்தில் அதிக கவனம் செலுத்தினால் நல்ல லாபம் கிடைக்கும். வருமானம் பெருகும்; வருங்காலம் நன்றாக அமையும்.
அரசியல்வாதிகளுக்கு இந்த ஆண்டு பிற்பகுதியில் கட்சி மேலிடத்தில் சாதகமான சூழ்நிலை நிலவும். அதனால் உங்கள் செயல்களை அவர்களின் அனுமதி பெற்ற பின்பே நடைமுறைப் படுத்தவும். அனாவசியப் பயணங்களைத் தள்ளிப்போடவும். தொண்டர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். மற்றபடி உங்களின் ரகசிய திட்டங்கள் அனைத்தும் வெற்றிப்பாதையை நோக்கி இட்டுச் செல்லும்.
கலைத்துறையினர் அதிக முயற்சிகளுக்குப் பிறகே புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். சக கலைஞர்களின் அபிமானத்தைப் பெறுவார்கள். அவர்களின் உதவியும் கிடைக்கப் பெறுவீர்கள். இருப்பினும் தொழிலில் போட்டி இருப்பதால் அதிக கவனத்துடன் உழைத்து விருதுகளையும் பாராட்டுகளையும் பெறுவீர்கள்.
பெண்மணிகளுக்கு பணவரவு அதிகரிக்கும். உங்களின் கோரிக்கைகளை குடும்பத்தில் அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். புதிய ஆடை அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மிகச் சுற்றுலா சென்று வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தந்தைவழி உறவினர்களால் நன்மை அடைவீர்கள்.
மாணவமணிகள் கல்வியில் முதல்தரமான இடத்தை எட்டிப் பிடிப்பீர்கள். படிப்பில் மும்முரமாக ஈடுபட்டு தேர்வில் வெற்றி பெறுவீர்கள். மேலும் படிப்பு சம்பந்தமானவற்றில் உங்களின் அணுகுமுறையில் மாற்றங்கள் தென்படும். போட்டி பந்தயங்களில் கலந்து கொள்வீர்கள். உடலாரோக்கியம் நன்றாகவே இருக்கும்.
பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
இந்த 2015 ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டில் ஜூலை மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் உங்கள் தயாள குணம் உயரும். செய்தொழிலில் எதிர்பார்த்த மாற்றங்களைக் காண்பீர்கள். உங்கள் எண்ணங்களை நறுக்குத் தெறித்தார் போல் பளிச் சென்று வெளிப்படுத்துவீர்கள். போட்டிகளை தைரியமாக எதிர்கொள்வீர்கள். அரசு ஊழியர்களிடம் உங்கள் தொடர்பு அனுகூலமான உறவுகளைக் கொண்டு சேர்க்கும். வேலைகள் அதிகரித்தாலும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு சரியாக செய்து முடித்துவிடுவீர்கள். உடன் பிறந்தோரிடம் இணக்கமாக பழகுவீர்கள். அதேநேரம் உடல்நலம் கவனிக்கப்பட வேண்டி வரும். யோகா, பிராணாயாமம் போன்றவைகளைச் செய்து பலன்களைக் கூட்டிக் கொள்வீர்கள். இருப்பினும் ஸ்பெகுலேஷன் துறையில் ஈடுபடவேண்டாம்.
சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்று உங்களுக்கு இணையானவர்களுடன் நட்பு கொள்வீர்கள். புதியவர்களின் நட்பு கிடைத்து அவர்களின் சிறப்பான ஒத்துழைப்பும் கிடைக்கும். நன்றாக சிந்தித்து பல விஷயங்களை ஆராய்ந்து முடிவெடுப்பீர்கள். உங்களின் ஆலோசனைகளைக் கேட்டு வெற்றி பெற்றவர்கள் உங்களை பாராட்டுவார்கள். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஆண்டு இறுதி வரையில் உள்ள காலகட்டத்தில் நண்பர்களுடன் சேர்ந்து புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உங்கள் குடும்பத்துக்கு நன்மைகளைச் செய்ய முற்படுவீர்கள். வீட்டிலும் வெளியிலும் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் வேலைகளில் இருந்த அலைச்சல் திரிச்சல்கள் மறையும். உடலில் இருந்த நோய் நொடிகள் முழுவதும் நீங்கும். தன்னம்பிக்கையுடனும் மனோதிடத்துடனும் உங்கள் காரியங்களை ஆற்றுவீர்கள். பிரச்னைகள் தானாகவே தீர்ந்துவிடும். நண்பர்களின் கருத்தைக் கேட்டபிறகே உங்கள் முடிவுகளைச் செய்வீர்கள்.
சிலருக்கு பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். உங்களின் அனைத்துச் செயல்களிலும் ஒரு பொதுநல நோக்கு இருக்கும். மேலும் காலத்திற்கு ஏற்றவாறு உங்களின் யுக்திகளை மாற்றிக் கொண்டு செயல்படுவீர்கள். குடும்பத்தினருடன் பொருட்காட்சி போன்ற கேளிக்கைத் தலங்களுக்குச் சென்று மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். கோர்ட் வழக்குகளில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். அதேசமயம் யாரையும் புண்படுத்தாத விதத்தில் பேசி வரவும். மற்றபடி வெளிநாடுகளில் இருந்த இளைஞர்கள் உள்நாட்டிலேயே வந்து பணிபுரிவார்கள். இதனால் குடும்பத்தில் சலசலப்பான சூழ்நிலை உண்டாகும். மற்றபடி ஏதோ ஒருவகையில் தேவைக்கு ஏற்ற பணம் வந்து கொண்டிருக்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்களுக்கு அனைத்து வேலைகளும் திட்டமிட்டது போல் முடியும். உழைப்பிற்கேற்ற வருமானம் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களிடம் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். சக ஊழியர்களுக்கு உங்களால் ஆன உதவிகளைச் செய்வீர்கள். விரும்பிய இடமாற்றத்தையும் எதிர்பாராத ஊதிய உயர்வையும் பெறுவீர்கள். அதேசமயம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் கடினமாக உழைக்க வேண்டி வரும்.
வியாபாரிகளுக்கு கூடுதலான பலன்கள் கிடைக்கும். கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் சுமுகமாக முடிவடையும். கடையில் புதிய சரக்குகளை வாங்கி லாபத்தைப் பெருக்குவீர்கள். நண்பர்களால் நன்மை அடைவீர்கள். அதனால் அவர்களிடம் ஆலோசனை செய்த பிறகு முடிவுகளை எடுக்கவும். புதிய முயற்சிகளை யுக்தியுடன் எடுத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
விவசாயிகள் கூடுதல் விளைச்சலைக் காண்பார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வார்கள். கால்நடைகளின் மூலமும் எதிர்பார்த்த பலனை அடைவார்கள். புதிய குத்தகைகளை நாடிச் செல்லலாம். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். நீர் வரத்தும் அதிகமாக இருப்பதால் புதிய மாற்றுப் பயிர்களை ஊடு பயிராக பயிர் செய்து பலனடைவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். தொண்டர்களின் ஆதரவுடன் பதவியைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். மேலும் முக்கிய பிரச்னைகளில் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம். புதிய முயற்சிகளைத் தவிர்த்து விடுங்கள்.
கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த அங்கீகாரத்தைப் பெறுவார்கள். புதிய நட்புகளால் சந்தோஷமடைவார்கள். புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கும். சம்பளத்தைக் குறைத்துக் கொண்டு ஒப்பந்தங்களை அதிகரித்துக் கொள்ளுங்கள். ரசிகர்களிடமும் எதிர்பார்த்த ஒத்துழைப்பைப் பெறுவீர்கள்.
பெண்மணிகள் அடக்கமாக நடந்து கொண்டு தங்கள் காரியங்களை வெற்றியடையச் செய்வார்கள். பெரியோர்களை மதித்துத் தங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்வார்கள். அவர்களின் ஆசியுடன் திட்டமிட்ட வேலைகளைச் செவ்வனே செய்து முடிப்பார்கள். அதேநேரம் சில உடலுபாதைகளுக்கும் ஆளாக நேரிடலாம். ஆகவே நோய் அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம். மற்றபடி குடும்பத்தினரிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும்.
மாணவமணிகள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண் டு வெற்றிவாகை சூடுவார்கள். படிப்பிலும் அக்கறையோடு ஈடுபடுவார்கள். படிப்பில் ஏற்படும் சந்தேகங்களில் உடனடி தெளிவு பெறுவது நல்லது. இதனால் சிறப்பான மதிப்பெண்கள் பெறுவீர்கள். உங்களது நண்பர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.
பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.
மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
இந்த 2015 ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டில் ஜூலை மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் எண்ணிய எண்ணங்கள் எண்ணியபடி நிறைவேறும். பெற்றோருக்கு திடீரென்று பணவரவு உண்டாகும். திருமணம் மூலம் புதிய நல்ல உறவினர்கள் கிடைப்பார்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். புதிய வீடு, நிலம் ஆகியவைகளை வாங்குவீர்கள். ஏழை எளியவர்களுக்கு உங்களாலான உதவிகளைச் செய்வீர்கள். மேலும் மகிழ்ச்சியான நாட்களை கொண்டாட அநாதை ஆசிரமங்களுக்குச் செல்வீர்கள். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உங்களிடம் தந்திரப்புத்தியால் எதிரிகளை அடக்குவீர்கள்.
செய்தொழில் விஷயமாக அதிகமான பயணங்களைச் செய்வீர்கள். சிலருக்கு புதிய இடங்களில் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பும் உண்டாகும். விலைமதிப்பான வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். சாதுக்கள், பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். அதேநேரம் அடிவயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளையும் சந்திக்க நேரிடும். சிலருக்கு சிறு அறுவை சிகிச்சையும் நடக்கும். ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரையில் உள்ள காலகட்டத்தில் ஆமை வேகத்தில் நடந்த விஷயங்கள் முயல் வேகத்தில் நடக்கத் தொடங்கும். யோகா, பிராணாயாமம், மெடிடேஷன் ஆகியவைகளை கற்றுக் கொள்வீர்கள். சிலர் கலைத்துறையில் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். இதனால் சமுதாயத்தில் பெயர், புகழ், உயரும். குடும்ப பாகப்பிரிவினையும் சுமுகமாக நடந்தேறும்.
அசையாச் சொத்துக்களிலிருந்தும் வருமானம் வரத் தொடங்கும். அனைத்து விஷயங்களையும் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள், கொடுக்கும் சில பிரச்னைகளை கண்டும் காணாமல் இருக்கவும். மற்றபடி குழந்தைகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். தெய்வ பலத்தைப் பெருக்கிக் கொள்ள ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள். ஆகார விஷயங்களிலும் சரியாக இருப்பீர்கள். உழைப்பையும் ஓய்வையும் சரியாகச் செய்வீர்கள். அதேசமயம் எவரிடமும் வெளிப்படையாக கோபத்தைக் காட்டி விடவேண்டாம். மேலும் முக்கியமான விஷயங்களை பேசும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும். அதோடு அடுத்தவர்கள் விஷயத்திலும் அனாவசியமாகத் தலையிட வேண்டாம். மற்றபடி வராது என்று நினைத்திருந்த கடன்கள் திடீரென்று உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். குடும்பத்திற்காகச் சில தியாகங்களையும் செய்யும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் நிலவும் இறுக்கமான சூழ்நிலைகளிலிருந்து விடுபட்டு விடுவார்கள். அசாத்திய துணிச்சலுடன் உங்கள் காரியங்களைச் செய்து வெற்றி பெறுவீர்கள். மேலதிகாரிகள் உங்களை பாராட்டும் சூழ்நிலை உருவாகும். அதேசமயம் சக ஊழியர்களிடம் சச்சரவின்றி பணியாற்றுவார்கள். உங்கள் பெயர் கெடாமல் தப்பிக்கலாம்.
வியாபாரிகளுக்கு கூட்டாளிகளுடன் சிறிய பிரச்னைகள் உருவாகும். அரசாங்க முயற்சிகளில் எடுக்கும் முயற்சிகளில் தடை ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி பெறுவார்கள். மற்றபடி கொடுக்கல்வாங்கல் விஷயங்களை நல்லபடியாக முடித்து விடுவார்கள். ஆண்டின் முற்பகுதியில் கடன்களை கொடுத்து வியாபாரத்தைப் பெருக்க வேண்டாம். மற்றபடி பிற்பகுதியில் புதிய முயற்சிகளை நல்லபடியாக செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள்.
விவசாயிகள் கொள்முதல் லாபங்கள் நிறையப் பெறுவீர்கள். பாசன வசதிகளுக்குச் செய்யும் செலவுகள் அதிகரித்தாலும் நன்மைகள் கூடும். கறவை மாடுகள் வாங்கி பால் வியாபாரம் செய்தும் மரங்கள் வளர்த்தும் லாபங்கள் பெறுவீர்கள். கால்நடைகளால் நல்ல லாபங்கள் கிட்டும். மேலும் புதிய நிலங்களை வாங்குவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு கட்சியில் வாக்கு வாதங்கள் அதிகரிக்கும். கட்சித் தலைமையிடம் நல்லமுறையில் நடந்துகொண்டு பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். உங்களின் செல்வாக்கு படிப்படியாக உயரத்தொடங்கும். சந்தோஷம் தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள். தொண்டர்களுக்கு உங்களால் ஆன உதவிகளைச் செய்வீர்கள். மற்றவர்களிடம் மனம் திறந்து அனைத்தையும் பேசி விடவேண்டாம்.
கலைத்துறையினரின் பெயரும் புகழும் சிறக்கும். உங்களின் திறமைகளால் அனைவரையும் அசத்துவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் உங்களைத் தேடிவரும். நல்ல பணவரவு பெறுவீர்கள். ரசிகர்களின் ஆதரவைப் பெற்று புதிய ரசிகர் மன்றங்களைத் திறப்பீர்கள். கலைநிகழ்ச்சிக்காக பயணங்களை மேற்கொண்டு நன்மைகளை அடைவீர்கள்.
பெண்மணிகள் இந்த ஆண்டு கணவரின் ஆதரவுடன் இல்லத்திற்குத் தேவையான பொருள்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையை காண்பீர்கள். குழந்தைகளின் மீது அதிகமான அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். மேலும் உறவினர்களிடமும் ஒற்றுமை பாராட்டுவீர்கள். உங்களின் பக்குவமான பேச்சினால் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். பெற்றோர்களின் ஆதரவுடன் உங்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். படிப்பில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும். நல்ல மதிப்பெண்கள் பெற்று சிறந்த மாணவராக பெயரெடுப்பீர்கள். நண்பர்களின் உதவி உங்களுக்கு கிடைக்கும்.
பரிகாரம்: பெருமாளை தரிசித்து வரவும். “நமோ நாராயணா’ என்று ஜபித்து வரவும்.
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
இந்த 2015 ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டில் ஜூலை மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் எதிர்வரும் பிரச்னைகளை நண்பர்களின் உதவியால் சமாளிப்பீர்கள். உங்களின் செல்வாக்கு உயரும். பொறுமையுடனும் நடத்து கொள்வீர்கள். உற்றார் உறவினர்கள் உங்கள் தயவை நாடி வருவர். உங்கள் மனவுறுதி கூடும்.
தொழிலில் மாற்றம் செய்ய முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல புதிய மாற்று வழிகள் புலப்படும். பணநடமாட்டம் சீராக இருக்கும். குழந்தைகள் உங்களை மகிழ்ச்சிபடுத்துவார்கள். புதிய பொறுப்புகளை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும். அதேநேரம் பெற்றோர் உடல்நலம் கவனிக்கப்பட வேண்டிவரும்.
சகோதர சகோதரர்களின் கஷ்டங்களைப் புரிந்து கொண்டு தக்க ஆலோசனைகளையும் வழங்குவீர்கள். அதோடு கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக்கொண்டு அரசு கெடுபிடியிலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள். மற்றபடி உங்களுக்கென்று ஒருதலை பாணியை வகுத்துக் கொண்டு செயல்படுவீர்கள். உடலுழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து உழைப்பீர்கள். சமூகத்தில் பிரபலமானவர்களை சந்திப்பீர்கள். எதிர்காலத்திற்காக புதிய நிலங்களை முதலீடாக வாங்குவீர்கள்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் புதிய விஷயங்களை விளையாட்டாகக் கற்றுக் கொள்வீர்கள். உங்களின் யுக்திகள் வெளியுலகுக்குத் தெரியவரும். இதனால் பிரபலமடைவீர்கள். சிறந்தவர்களைத் தேர்ந்தெடுத்து நட்பு கொள்வீர்கள். செய்தொழிலில் சிறப்பான லாபத்தைக் காண்பீர்கள். ஸ்பெகுலேஷன் துறைகளிலிருந்தும் வருமானத்தைக் காண்பீர்கள்.
குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளையும் நடத்தி மகிழ்வீர்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களையும் வாங்குவீர்கள். விருப்பமான இடங்களுக்கு குடும்பத்தினருடன் சென்று வருவீர்கள். குடும்பத்தில் மழலைச் செல்வம் உண்டாகும். ஆன்மிக யாத்திரை அல்லது புதிய கோயில்களுக்கு சென்று வருவீர்கள்.
சகோதர சகோதரிகளிடம் பிரச்னைகளை பேசித் தீர்த்துக் கொள்வீர்கள். செய்ய வேண்டிய வேலைகளைச் சரியாக முன்னுரிமை கொடுத்து முடிக்கும் திறனைப் பெறுவீர்கள். அதிக முயற்சி இல்லாமல் உங்கள் செயல்கள் முழு வெற்றி பெறும். கண், பல் உபாதைகள் தோன்றினால் விரைவில் அதிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். அறக்கட்டளைகளிலும் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள் என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் உள்ள எதிர்ப்புகளைச் சாமர்த்தியமாக சமாளிப்பார்கள். திட்டமிட்ட வேலைகளை சிறிது காலதாமதத்திற்குப்பிறகு நல்லபடியாக முடித்து விடுவார்கள். சக ஊழியர்களிடமும் எந்த உதவியையும் எதிர்பார்க்க முடியாது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் பதவி உயர்வு கிடைக்கும். மற்றபடி ஆண்டு முழுவதும் வருமானம் சீராகவே இருக்கும். அலுவலகத்தில் வீட்டுக் கடன் கிடைக்கும். புதிய அலுவலகப் பயிற்சிகளும் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும். அரசாங்கத்தின் கெடுபிடிகள் குறையும். கூட்டாளிகளும் உங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள். உங்களுக்கு எதிராக போட்டிக் கடை நடத்தி வியாபாரம் செய்தவர்கள் இந்த ஆண்டு இணக்கமாக நடந்து கொள்வார்கள். சமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும்.
விவசாயிகள் குறைந்த வருமானத்தைப் பெற்றாலும் உங்கள் கௌரவத்திற்கு குறைவு வராது. புதிய குத்தகைகளை தேடி அடைவீர்கள். அதோடு மகசூல் அதிகரிக்க நீர் பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும். மேலும் பூச்சிக்கொல்லி மருந்துக்கும் சிறிது செலவு செய்ய வேண்டி வரும்.
அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளை திடத்துடன் செயல்படுத்துவார்கள். மேலிடத்தின் ஆதரவு இருப்பதால் புதிய பதவிகள் தேடிவரும். அதேசமயம் பிடிவாதங்களைத் தளர்த்திக் கொண்டு உழைக்கவும். இதனால் உங்கள் புகழும் செல்வாக்கும் உயரும். அரசியல் லாபங்களைப் பெற அனைவரிடமும் நட்புடன் பழகுவது நல்லது. எதிர்க்கட்சியினரிடம் ஒற்றுமை பாராட்டுவீர்கள்.
கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பர். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய படைப்புகளைத் தயாரிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். வருமானம் கூடுமானவரை நன்றாகவே இருக்கும். ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைவீர்கள். அதேநேரம் சக கலைஞர்கள் மற்றும் நண்பர்களிடம் பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருக்கவும்.
பெண்மணிகளின் அந்தஸ்து உயரும். உறவினரிடத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். கணவரிடம் ஒற்றுமையோடு நடந்து கொள்வீர்கள். ஆடை ஆபரணங்களை வாங்குவீர்கள். வீடு, வாகனம் போன்றவைகளை வாங்கும் யோகமும் உண்டாகும். உடன் பிறந்தோரிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவையும் உதவிகளையும் பெறுவீர்கள்.
மாணவமணிகள் இந்த ஆண்டு படிப்பில் வளர்ச்சியைக் காண்பார்கள். அதேசமயம் பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் அனுசரித்துச் சென்று உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். மேலும் பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் ஆசிரியரிடமோ அல்லது பெற்றோரிடமோ கேட்டு படிப்பது நல்லது. பாடங்களை மனப்பாடம் செய்ய, அதற்கான பயிற்சிகளைச் செய்யுங்கள். அதோடு உடற்பயிற்சி செய்து மனப்புழுக்கத்தில் இருந்து விடுபடுங்கள்.
பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வரவும்.
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)
இந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் குழந்தை பிறப்பு உண்டாகும். செல்வ சேர்க்கை படிப்படியாக உண்டாகும். உங்கள் அந்தஸ்து கௌரவம் ஆகியவை கூடும். உங்களின் நம்பிக்கை பலப்படும். பிரச்னைகளை புரிந்துகொண்டு அதற்கேற்ப சிறப்பான அணுகுமுறைகளை கையாளுவீர்கள். மனதில் பட்டதை சுதந்திரமாக எடுத்துரைப்பீர்கள்.
செய்தொழில் முழுமையாக உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். சுறுசுறுப்புடன் பணியாற்றி உங்கள் குறிக்கோளை எட்டி விடுவீர்கள். பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள் எதிர்பார்த்த பதவிகளைப் பெறுவார்கள். பெரிய விஷயங்களில் சுயமாக முடிவெடுக்காமல் அனுபவஸ்தர்களை கலந்தாலோசித்து எடுப்பீர்கள். உங்களுக்குக்கீழ் பணிபுரிபவர்களுக்கு எது தேவையோ அதை அவர்கள் கேட்காமலேயே தருவீர்கள்.
அதோடு திடீர் பயணங்களையும் தவிர்க்க முடியாது. நிதி நிலைமை ஓரளவுக்கு நன்றாகவே இருக்கும். அதிக ஆதாயம் இல்லாவிட்டாலும் புதிய பொறுப்புகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பெற்றோர்களின் நிலை உயரும். வழக்கு விவகாரங்களில் நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள். நெடுநாளாக விற்க முயற்சித்து வந்த அசையாச் சொத்துக்கள் இந்த காலகட்டத்தில் விற்று விடும்.
ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரையில் உள்ள காலகட்டத்தில் வெளியூர், வெளிநாட்டுக்குச் செல்ல விசா கிடைக்கும். விலகி நின்ற கூட்டாளிகளும் நண்பர்களும் உங்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள். குடும்பத்திலும் நிலவி வந்த சஞ்சலங்கள் சலனங்கள் மாறும். உங்கள் செயல்கள் நினைத்தபடியே நடக்கும். மனதை தியானம், பிராணாயாமம் போன்ற விஷயங்களில் திருப்புவீர்கள். நேர்மறை எண்ணங்கள் வளரும். அதோடு தவறான கெட்டப் பழக்கங்களிலிருந்து சிறிது சிறிதாக விலகத் தொடங்குவீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் நிலம், வீடு ஆகியவற்றில் முதலீடு செய்வீர்கள். உங்களின் தேக ஆரோக்கியமும் சீர்படும். உடன்பிறந்தோரின் ஆதரவு தேடாமலேயே கிடைக்கும். குழந்தைகளின் வளர்ச்சி எதிர்பார்த்ததை விட வேகமாக இருக்கும். அவர்களை வெளிநாடுகளுக்கும் அனுப்பூவீர்கள். தைரியம், ஊக்கத்துடன் உங்கள் காரியங்களைச் செய்வீர்கள். அரசாங்கத்திலிருந்து எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். முன்பின் அறியாதவர்கள் தக்க சமயத்தில் தேடி வந்து உதவி செய்வார்கள். அதிசயத் தகவல்களும் உங்களைத் தேடி வரும். உங்கள் செயல்களை நுண்ணறிவோடும் விவேகத்துடனும் புரிந்து நடைமுறை படுத்துவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். தெய்வ வழிபாட்டிலும் குல தெய்வ பிரார்த்தனைகளையும் சிறப்பாக நிறைவேற்றுவீர்கள் என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்களுக்கு உத்தியோகத்தில் பணவரவுக்கு குறைவு வராது என்றாலும் வேலை பளு கூடத்தொடங்கும். சிலருக்கு விரும்பத்தகாத இடமாற்றங்களும் உண்டாகலாம். மேலதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாகவும் நேரிடலாம். சிலருக்கு புதிய வேலைகளுக்கு மாறவும் வாய்ப்புண்டாகும். அதேநேரம் சக ஊழியர்கள் ஒத்துழைப்புடன் இருக்க மாட்டார்கள். அவர்களிடம் நெருக்கம் வேண்டாம்.
வியாபாரிகள் இந்த ஆண்டு துணிந்து முதலீடுகளைச் செய்வீர்கள். இதனால் வருமானம் கூடத்தொடங்கும். வெளியில் கொடுத்திருந்த கடன்களும் திரும்ப கைக்கு வந்து சேரும். வியாபாரத்தை நல்ல முறையில் விரிவு படுத்துவீர்கள். நண்பர்களும் உதவி செய்வார்கள்.
விவசாயிகள் அரசு உதவிகளைப் பெற்று மகிழ்வார்கள். விளைச்சல் நன்றாக இருக்கும். கொள்முதல் லாபங்களும் சிறப்பாக அமையும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகளும் தேடி வரும். புதிய குத்தகைகளையும் எடுப்பீர்கள். அதேநேரம் வங்கிக் கடன்கள் தாமதமாகும். பணவசதிகளைப் பெருக்கிக் கொள்ளும் ஆண்டாக இது அமைகிறது.
அரசியல்வாதிகளுக்கு யோசித்து எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சாதகமாகவே அமையும். இருப்பினும் கட்சியில் யாரிடமும் வெளிப்படையாக பழக வேண்டாம். புதிய பொறுப்புகளை கவனத்துடன் கையாளுவீர்கள். கட்சிப்பணிகளை சிறப்பாக ஆற்றுவீர்கள். அதேநேரம் மக்களுக்கான உண்மையான போராட்டங்களில் மட்டுமே ஈடுபடவும்.
கலைத்துறையினருக்கு பெயரும் புகழும் கிடைக்கும். உங்கள் திறமை பளிச்சிடும். வேலைக்குத் தகுந்தவாறு சுறுசுறுப்புடன் பணியாற்றி குறித்த நேரத்திற்குள் முடித்துக் கொடுத்து நற்பெயர் எடுப்பீர்கள். வருமானமும் திருப்திகரமாக இருக்கும். ரசிகர்களின் ஆதரவும் சிறப்பாகத் தொடரும் ஆண்டாக இது அமைகிறது.
பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். பணவரவு நன்றாக இருக்கும். மற்றவர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். குழந்தைகளால் சந்தோஷம் அடைவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தர்ம காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். பழைய கசப்புகளை மறந்து இன்பமாகப் பொழுதைக் கழிப்பீர்கள்.
மாணவமணிகள் நன்றாக உழைத்தால் அதற்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள். கடுமையாக உழைத்துப் படிக்கும் மாணவர்கள் சாதிக்கும் யோகத்தை அடைவார்கள். மற்றபடி பெற்றோர்களின் ஆதரவு இருப்பதால் உங்களின் கோரிக்கைகள் நிறைவேறக் காண்பீர்கள்.
பரிகாரம்: முருகப் பெருமானை வழிபட்டு வரவும்.
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
இந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் உங்களின் நிர்வாகத் திறமையை பலரும் பாராட்டுவார்கள். உங்கள் முகத்தில் வசீகரம் கூடும். சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு நிதானமாகப் பேசுவீர்கள். வருமானம் படிப்படியாக வளரத் தொடங்கும். நெடுநாளாக போக விரும்பிய இடங்களுக்கு குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக பயணம் செய்வீர்கள். பங்கு வர்த்தகம் போன்ற ஸ்பெகுலேஷன் துறைகளிலிருந்து லாபம் கொட்டும். வாழ்க்கை தன் கட்டுப்பாட்டை இழந்து விட்டது என்று நினைத்திருந்தவர்கள் கற்பனைக்கும் எட்டாத உயரத்திற்குச் செல்வார்கள். குழந்தை இல்லாமல் தவித்தவர்களுக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். சமூகத்தில் உயர்ந்தோரிடமிருந்த பகை மாறி நட்பு மலரும். பழைய உடல் உபாதைகளிலிருந்து முழுவதுமாக விடுபட்டு பீடுநடை போடுவீர்கள்.
மனதளவில் உங்களை காயப்படுத்திய நண்பர்கள், உற்றார் உறவினர்கள் மனம் திருந்தி மன்னிப்பு கேட்பார்கள். புதிய வீடு, நிலம் வாங்க முன் பணம் கொடுப்பீர்கள். கர்வத்தை விட்டொழித்து அவர்களுக்கு ஆதரவாக இருப்பீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் சுமுகமான பாகப்பிரிவினைகள் ஏற்படும். இதனால் பழைய மனக்கசப்புகளும் நீங்கும். உங்களின் சுயமரியாதையை குறைத்துக் கொண்டு ஒரு நிர்பந்தத்துக்காக பழகி வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து விடுதலை கிடைத்து சுதந்திரமாகச் செயல்படும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.
ஆகஸ்ட் மாதம் முதல் ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் உங்களின் தொழிலில் இருந்த முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். உங்கள் செயல்கள் வெற்றியடைந்தாலும் அவைகளில் சிறு தடங்கல்கள் உண்டாகும். சிறிது சோர்வுகள் ஏற்பட்டாலும் உங்கள் செயல்களை கடமை தவûறாமல் முடித்து விடுவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். உங்களுக்கு கேடு நினைத்த எதிரிகள் விலகி விடுவார்கள்.
குடும்பத்தில் செல்வாக்குடன் வாழ்வீர்கள். வெளியூரிலிருந்து நன்மையான செய்தி ஒன்று உங்களைத் தேடி வரும். உடலாரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தோரிடம் ஒற்றுமையாக இருப்பீர்கள். அவர்களுக்கும் உங்களாலான உதவிகளைச் செய்வீர்கள். புதிய பயிற்சிகளைச் செய்து புத்துணர்ச்சியுடன் காரியமாற்றத் துவங்குவீர்கள். நன்மை தரும் பயணங்களைச் செய்வீர்கள். அதேநேரம் உங்களின் திட்டங்களை எவரிடமும் கூறாமல் நீங்களாகவே நிறைவேற்றுவது சிறப்பு. இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களையும் வாங்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்களுக்கு இந்த ஆண்டு வேலையில் பளு குறையும். உங்கள் மேலதிகாரிகளின் மனநிலையறிந்து சமயோசிதமாக நடந்து கொள்வீர்கள். அதே சமயம் உங்கள் வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்தால் குழப்பங்களிலிருந்து தப்பிக்கலாம். மற்றபடி சிறிய அளவு முயற்சிகளில் நிறைவான வெற்றிகளை அடைவீர்கள். அதேசமயம் சக ஊழியர்கள் உங்களிடம் சற்று பாராமுகமாகவே இருந்து வருவார்கள். அதனால் சக ஊழியர்களை அதிகம் நம்ப வேண்டாம்.
வியாபாரிகள் ஏற்றமிகு வருடத்தில் காலெடுத்து வைத்துள்ளீர்கள். ஏற்கெனவே ஏற்பட்டுள்ள வெளிநாட்டுத் தொடர்புகளால் இப்பொழுது நன்மை கிடைக்கும். போட்டி பொறாமைகள் மறைந்து, வெளிப்படையாக வியாபாரம் நடக்கும். கூட்டாளிகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடக்கும் சூழ்நிலை உருவாகும். மற்றபடி உங்கள் பிரதிநிதிகள் பல இடங்களுக்குச் சென்று புதிய வாய்ப்புகளைத் தேடித் தருவார்கள்.
விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். இதனால் சந்தை வியாபாரத்தில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். அதோடு செலவு குறைந்த மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டும் உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் அனுசரணையோடும் நடந்து கொண்டால் மேலும் நன்மை அடையலாம். அதேநேரம் வயல்வரப்பு பிரச்னைகளில் தலையிட வேண்டாம்.
அரசியல்வாதிகளின் பெயரும் புகழும் வளரும். புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். பயணங்களால் நன்மைகள் உண்டாகும். உங்கள் அனைத்து வேலைகளையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். தொண்டர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். அவர்களை அலட்சியப்படுத்தாமல் உதவிகரமாக இருக்கவும்.
கலைத்துறையினரின் ஆற்றல் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்களுக்கென்று தனி இடத்தைப் பிடிப்பதில் வெற்றி பெறுவீர்கள். உங்களின் படைப்புகள் மக்களிடம் சரியான முறையில் சென்றடைந்து வரவேற்புகளைப் பெறும். வெளிநாட்டுப் பயணங்களை ரசிகர்களின் ஆதரவுடன் பெறுவீர்கள்.
பெண்மணிகளுக்கு பணவரவு நன்றாக இருப்பதால் ஆடம்பரப் பொருள்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். அதேசமயம் கணவரோடு ஒற்றுமையுடன் நடந்து கொள்ளவும்.
மாணவமணிகள் கல்வியில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றியடைவார்கள். சோம்பேறித்தனத்தை விட்டொழித்து இந்த ஆண்டு முழுவதும் சுறுசுறுப்பாக பணியாற்றுவீர்கள். அனைத்து இடையூறுகளையும் ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஆதரவினால் தாண்டி வந்து விடுவீர்கள்.
பரிகாரம்: அம்பாள் வழிபாடு உகந்தது.
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)
இந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் ஓய்வில்லாமல் உழைப்பீர்கள். உழைப்பிற்கு இரட்டிப்பாக வருமானம் கிடைக்கும். வழக்குகளில் சாதகமானமுடிவு கிடைக்காததால் மேல்முறையீடு செய்வீர்கள். அதேநேரம் சமரசமாகச் செல்வது நலம் பயக்கும். நேர்மறையான நல்லெண்ணங்களை மனதில் கொண்டு சமூகத்திற்கு நன்மை செய்ய விழைவீர்கள். உங்களை நம்பி வருபவர்களை அன்புடன் ஆதரிப்பீர்கள். முடிவுகளை அடைவதற்கு ஏற்ற வழிமுறைகளை சிந்தித்து கடைபிடிப்பீர்கள். வராது என்று நினைத்திருந்த கடன்கள் எல்லாம் கைக்கு வந்து சேரும்.
சிலருக்கு புதிய வீடுகளுக்கு மாறும் யோகமும் உண்டாகும். அதேநேரம் நண்பர்களையும் கூட்டாளிகளையும் அதிகம் நம்பாமல் இருந்து, தனித்து செயல்படவும். பங்கு மார்கெட் போன்ற ஸ்பெகுலேஷன் துறைகளிலும் மிதமாக செயல்படவும். பெற்றோரின் ஆதரவு குறையும் என்பதால் அவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளுங்கள். மேலும் குழந்தைகளாலும் சிறு பிரச்னைகள் தோன்றும். அதனால் அவர்களைக் கண்டும் காணாமலும் இருந்து கண்காணிக்கவும்.
அரசு வழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் அவைகளை சாதுர்யத்துடன் சமாளித்து விடுவீர்கள். புதிய முயற்சிகளில் தாமதமாக பலன்கள் தெரியும். மேலும் புதிய தொழில் முதலீடுகளுக்காக பூர்விகச் சொத்துக்களையும் விற்க நேரிடும். மற்றபடி உங்கள் திறமைகள் பளிச்சிடும். தன்னம்பிக்கை கூடும். ஆணவத்தையும் எதிர்பார்ப்பையும் விட்டொழித்து கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் செயல்பட வைக்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.
ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரையில் உள்ள காலகட்டத்தில் உங்களின் சிறிய முயற்சிகளும் பெரிய பலன்களை கொண்டு வந்து சேர்க்கும். குடும்பத்தில் குழந்தைகளுக்குத் திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கும் குழந்தை பாக்கியம் உண்டாகும். உங்களின் பெயரும் புகழும் கூடும். வீட்டிலும் வெளியிலும் வரவேற்பு பெறுவீர்கள். தேக ஆரோக்கியம் மேம்பட யோகா, பிராணாயாமம் போன்றவைகளைச் செய்வீர்கள். குடும்பத்தை விட்டு பிரிந்து போயிருந்த உறவினர்கள் திரும்பி வருவார்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் வரும். சேவை மனப்பான்மையுடன் ஆன்மிக தர்ம பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு வெளியூரிலும் தொழிலை விரிவுபடுத்த வாய்ப்புகள் தேடிவரும். மேலும் வெளியூரில் வீடு வாங்கும் வாய்ப்புகளும் உண்டாகும். குடும்பத்தினர் உங்களை மதித்து நடப்பார்கள். கடல்கடந்து சென்று வசிக்கும் வாய்ப்புகளும் சிலருக்கு ஏற்படும். பெற்றோர்களுக்கு இருந்த உடலுபாதைகள் தீர்ந்து மருத்துவச் செலவுகள் குறையும் என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் கவனத்துடன் செயல்படவும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்குமென்றாலும் நீங்கள் பேசும் வார்த்தைகளால் அவர்கள் எரிச்சலடையலாம். மற்றபடி இடமாற்றங்கள் பற்றிய கோரிக்கைகள் கருணையுடன் பரிசீலிக்கப்படும். சக ஊழியர்களுடன் சுமுகமான உறவுநிலை தென்படும். அவர்களின் உதவியால் பெரும்பாலான காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். பணவசதி தாராளமாக இருப்பதால் வருங்காலத்திற்கான சேமிப்புகளில் கவனம் செலுத்தலாம்.
வியாபாரிகளுக்கு கொடுக்கல்வாங்கல்கள் நலமாக முடியும். புதிய யுக்திகளைப் புகுத்தி வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். அதேநேரம் ஆண்டின் முற்பகுதியில் எவருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். கூட்டாளிகளுடன் ஒற்றுமை குறைந்தாலும் உங்களின் தனித் தன்மையை வெளிப்படுத்தி வெற்றியடைவீர்கள்.
விவசாயிகளுக்கு இந்த 2015 ஆம் ஆண்டு லாபகரமாக அமைகிறது. தானிய பொருள்களின் விற்பனை நன்றாகவே நடக்கும். அதேநேரம் இடைத்தரகர்களிடம் கவனமாக இருக்கவும். பூச்சி மருந்துக்கும் கால்நடைகளுக்கும் சிறிது செலவு செய்ய நேரிடும். உங்கள் பழைய கடன்கள் வசூலாகும். குத்தகை பாக்கிகளையும் திருப்பிச் செலுத்துவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு ஆண்டின் பிற்பகுதியில் கட்சியில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உங்களின் மக்கள் தொண்டுகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள். உங்கள் எதிரிகளின் பலம் குறையும். புதிய தொண்டர்களையும் பெறுவீர்கள்.
கலைத்துறையினருக்கு சக கலைஞர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இதனால் படிப்படியான வளர்ச்சியடைவீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆனாலும் அனாவசியச் செலவுகளையும் செய்வீர்கள். சிறிய தடைகளுக்குப்பிறகு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ரசிகர்களின் வரவேற்பும் அமோகமாக இருக்கும்.
பெண்மணிகளுக்கு இந்த ஆண்டு முழுவதும் பொருளாதார நிலையில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை தென்படும். உற்றார் உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். வீட்டிற்குத் தேவையான நவீன உபகரணங்களையும் வாங்குவீர்கள்.
மாணவமணிகள் கேளிக்கைகளிலிருந்து மனதை அகற்றி படிப்பில் முழுகவனத்துடன் ஈடுபட்டால்தான் சராசரிக்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெறுவீர்கள். கெட்ட பழக்கங்களில் ஈடுபடால் இருக்க, நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுங்கள். மனதில் வீண் குழப்பங்கள் வேண்டாம்.
பரிகாரம்: ஐயப்பனை வழிபட்டு வரவும்.
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
இந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் பொருளாதாரம் சிறப்பாக அமையும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களிலிருந்து வருமானம் வரத்தொடங்கும். பழைய கடன்களை அடைத்து விடுவீர்கள். அதேநேரம் அடையாச் சொத்துக்கள் வாங்க கடன்கள் வாங்க நேரிடும். மற்றபடி மறைமுக எதிரிகளையும் புறம் பேசுபவர்களையும் இனம் கண்டு ஒதுக்கிவிடுவீர்கள். குடும்பத்தினரிடமிருந்த வெறுப்புகள் மறைந்து மகிழ்ச்சியாக உறவாடுவீர்கள். தெய்வ வழிபாட்டை நம்பிக்கையுடன் மேற்கொள்வீர்கள். பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள்.
அவர்களால் செய்தொழிலில் புதிய வாய்ப்புகளையும் பெறுவீர்கள். அதேநேரம் உங்களின் தனிப்பட்ட ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ளமாட்டீர்கள். தொழிலில் எதிர்பாராத அளவுக்கு அபிவிருத்தி உண்டாகும். கோர்ட் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வீட்டிலும் வெளியிலும் உங்கள் செல்வாக்கு படிப்படியாக உயரும். திருமணமாகி புத்திர பாக்கியத்திற்கு ஏங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு ஒன்றுக்கு இரண்டாக குழந்தைகள் பிறக்கும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களுக்கு தக்க புத்தி சொல்லி சரியான பாதையில் திருப்பி விடுவீர்கள்.
உணவையும் உடற்பயிற்சியையும் சரியாக எடுத்தும் செய்தும் வருவீர்கள். அதோடு மனக் கவலைகளிலிருந்து மீள தியானம், பிராணாயாமம் போன்றவைகளையும் செய்து உற்சாகத்துடன் இருப்பீர்கள். அதோடு குல தெய்வ பூஜை செய்து குல தெய்வத்தின் துணையைத் தேடிக் கொள்வீர்கள். பெரியோர்களின் நட்பு தோடாமலேயே கிடைக்கும். வெளிநாட்டுச் செய்தி ஒன்று உங்களைத் திக்குமுக்காடச் செய்யும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.
ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் தன்னடக்கத்துடன் போதுமென்ற மனதுடன் இருப்பீர்கள். சாதக பாதகங்களை ஆராய்ந்து உங்களின் நுண்ணறிவால் சரியான முடிவுகளை எடுப்பீர்கள். பிறரைப் பற்றிய புதிய ரகசியங்களை அறிய முற்படுவீர்கள். அதேநேரம் உங்கள் எதிரிகளிடம் வெளிப்படையாக எதிர்ப்பைக் காட்ட வேண்டாம். எதிர்காலத்தைப் பற்றி நினைக்காமல் இன்று எது முக்கியமோ அதைச் செய்ய முற்படுவீர்கள். அளவுக்கு மீறி ஆசைப்பட்டு வில்லங்கங்களில் மாட்டிக் கொள்ள வேண்டாம். மற்றபடி மனதில் நம்பிக்கை வளரும். இக்கட்டான தருணங்களில் உங்களின் சமயோசித புத்தி கைகொடுக்கும். அதோடு எவ்வளவு சிறப்புகள் ஏற்படினும் அவைகளை பற்றி எவரிடமும் வெளிப்படையாகப் பேசவேண்டாம். அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தவும். மற்றபடி முதுகுக்குப்பின்னால் குறை சொல்பவர்களை கண்டு கொள்ள வேண்டாம். மற்றபடி உழைத்துத்தான் பொருளீட்ட வேண்டும். பங்கு வர்த்தகம் போன்ற ஸ்பெகுலேஷன் துறைகளிலிருந்து எந்த லாபத்தையும் எதிர்பார்க்க முடியாது என்கிற காலகட்டமிது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்களுக்கு பிரச்னைகள் குறையும். மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். அதேநேரம் அலுவலக ரீதியாக அனாவசியப் பயணங்களைச் செய்ய நேரிடும். மற்றபடி வருட பிற்பகுதியில் நீங்கள் விரும்பிய இடமாற்றங்களைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த ஊதிய உயர்வையும் பெறுவீர்கள்.
வியாபாரிகளுக்கு கொடுக்கல்வாங்கல் சிறப்பாக முடியும். பொருள்களின் விற்பனை நன்றாக நடக்கும். அதேசமயம் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்து அதற்கேற்ப விற்பனை முறையை கையாண்டால் நன்கு வெற்றி பெறலாம். மற்றபடி கூட்டாளிகளிடம் உங்கள் எண்ணங்களையும் திட்டங்களையும் அனாவசியமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் அதிகரிக்கும். புதிய கழனிகளை வாங்கி வருங்காலத்தை வளமாக்கிக் கொள்வீர்கள். கையிருப்புப் பொருள்களுக்குச் சந்தையில் நல்ல விலை கிடைக்கும். பால் வியாபாரத்தில் நல்ல லாபம் காண்பீர்கள். அதேநேரம் பூச்சிக் கொல்லிகளை தக்க நேரத்தில் பயன்படுத்தினால் உற்பத்தியில் நல்ல பலனை அடையலாம்.
அரசியல்வாதிகள் தங்கள் எண்ணங்களைச் செயலாக்கும் முயற்சிகள் வெற்றியடையும். தொண்டர்கள் உங்கள் சொல்லுக்கு செவி சாய்ப்பார்கள். கட்சி பிரசாரத்தில் ஈடுபடுவீர்கள். வருமானம் எதிர்பார்த்த அளவுக்குக் கிடைக்கும்.
கலைத்துறையினர் இந்த ஆண்டு தங்கள் திறமையை உணர்ந்து செயல்படுவீர்கள். சக கலைஞர்களிடம் உதவிகளைப் பெறுவீர்கள். கிடைக்கும் ஒப்பந்தங்கள் நிறைவாக இருக்கும். சிறப்பான வருமானத்தைக் காண்பீர்கள். ரசிகர்களின் ஆதரவும் அமோகமாக இருக்கும்.
பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். அதோடு உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் இருந்தால் மட்டுமே குடும்பத்தில் அமைதியை காண்பீர்கள். மற்றபடி குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். ஆடை ஆபரண சேர்க்கைகளும் உண்டாகும்.
மாணவமணிகள் இந்த ஆண்டு முன்னேற்றத்திற்கு மேற்கொள்ளும் பயிற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். விளையாட்டிலும் உங்கள் முத்திரையை பதிப்பீர்கள். பேச்சுப்போட்டிகளிலும் கலந்து வெற்றி கொள்வீர்கள்.
பரிகாரம்: பைரவர் வழிபாடு உகந்தது.
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
இந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் பொருளாதாரம் சிறப்பாக அமையும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களிலிருந்து வருமானம் வரத்தொடங்கும். பழைய கடன்களை அடைத்து விடுவீர்கள். அதேநேரம் அடையாச் சொத்துக்கள் வாங்க கடன்கள் வாங்க நேரிடும். மற்றபடி மறைமுக எதிரிகளையும் புறம் பேசுபவர்களையும் இனம் கண்டு ஒதுக்கிவிடுவீர்கள். குடும்பத்தினரிடமிருந்த வெறுப்புகள் மறைந்து மகிழ்ச்சியாக உறவாடுவீர்கள். தெய்வ வழிபாட்டை நம்பிக்கையுடன் மேற்கொள்வீர்கள். பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள்.
அவர்களால் செய்தொழிலில் புதிய வாய்ப்புகளையும் பெறுவீர்கள். அதேநேரம் உங்களின் தனிப்பட்ட ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ளமாட்டீர்கள். தொழிலில் எதிர்பாராத அளவுக்கு அபிவிருத்தி உண்டாகும். கோர்ட் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வீட்டிலும் வெளியிலும் உங்கள் செல்வாக்கு படிப்படியாக உயரும். திருமணமாகி புத்திர பாக்கியத்திற்கு ஏங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு ஒன்றுக்கு இரண்டாக குழந்தைகள் பிறக்கும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களுக்கு தக்க புத்தி சொல்லி சரியான பாதையில் திருப்பி விடுவீர்கள்.
உணவையும் உடற்பயிற்சியையும் சரியாக எடுத்தும் செய்தும் வருவீர்கள். அதோடு மனக் கவலைகளிலிருந்து மீள தியானம், பிராணாயாமம் போன்றவைகளையும் செய்து உற்சாகத்துடன் இருப்பீர்கள். அதோடு குல தெய்வ பூஜை செய்து குல தெய்வத்தின் துணையைத் தேடிக் கொள்வீர்கள். பெரியோர்களின் நட்பு தோடாமலேயே கிடைக்கும். வெளிநாட்டுச் செய்தி ஒன்று உங்களைத் திக்குமுக்காடச் செய்யும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.
ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் தன்னடக்கத்துடன் போதுமென்ற மனதுடன் இருப்பீர்கள். சாதக பாதகங்களை ஆராய்ந்து உங்களின் நுண்ணறிவால் சரியான முடிவுகளை எடுப்பீர்கள். பிறரைப் பற்றிய புதிய ரகசியங்களை அறிய முற்படுவீர்கள். அதேநேரம் உங்கள் எதிரிகளிடம் வெளிப்படையாக எதிர்ப்பைக் காட்ட வேண்டாம். எதிர்காலத்தைப் பற்றி நினைக்காமல் இன்று எது முக்கியமோ அதைச் செய்ய முற்படுவீர்கள். அளவுக்கு மீறி ஆசைப்பட்டு வில்லங்கங்களில் மாட்டிக் கொள்ள வேண்டாம். மற்றபடி மனதில் நம்பிக்கை வளரும். இக்கட்டான தருணங்களில் உங்களின் சமயோசித புத்தி கைகொடுக்கும். அதோடு எவ்வளவு சிறப்புகள் ஏற்படினும் அவைகளை பற்றி எவரிடமும் வெளிப்படையாகப் பேசவேண்டாம். அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தவும். மற்றபடி முதுகுக்குப்பின்னால் குறை சொல்பவர்களை கண்டு கொள்ள வேண்டாம். மற்றபடி உழைத்துத்தான் பொருளீட்ட வேண்டும். பங்கு வர்த்தகம் போன்ற ஸ்பெகுலேஷன் துறைகளிலிருந்து எந்த லாபத்தையும் எதிர்பார்க்க முடியாது என்கிற காலகட்டமிது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்களுக்கு பிரச்னைகள் குறையும். மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். அதேநேரம் அலுவலக ரீதியாக அனாவசியப் பயணங்களைச் செய்ய நேரிடும். மற்றபடி வருட பிற்பகுதியில் நீங்கள் விரும்பிய இடமாற்றங்களைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த ஊதிய உயர்வையும் பெறுவீர்கள்.
வியாபாரிகளுக்கு கொடுக்கல்வாங்கல் சிறப்பாக முடியும். பொருள்களின் விற்பனை நன்றாக நடக்கும். அதேசமயம் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்து அதற்கேற்ப விற்பனை முறையை கையாண்டால் நன்கு வெற்றி பெறலாம். மற்றபடி கூட்டாளிகளிடம் உங்கள் எண்ணங்களையும் திட்டங்களையும் அனாவசியமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் அதிகரிக்கும். புதிய கழனிகளை வாங்கி வருங்காலத்தை வளமாக்கிக் கொள்வீர்கள். கையிருப்புப் பொருள்களுக்குச் சந்தையில் நல்ல விலை கிடைக்கும். பால் வியாபாரத்தில் நல்ல லாபம் காண்பீர்கள். அதேநேரம் பூச்சிக் கொல்லிகளை தக்க நேரத்தில் பயன்படுத்தினால் உற்பத்தியில் நல்ல பலனை அடையலாம்.
அரசியல்வாதிகள் தங்கள் எண்ணங்களைச் செயலாக்கும் முயற்சிகள் வெற்றியடையும். தொண்டர்கள் உங்கள் சொல்லுக்கு செவி சாய்ப்பார்கள். கட்சி பிரசாரத்தில் ஈடுபடுவீர்கள். வருமானம் எதிர்பார்த்த அளவுக்குக் கிடைக்கும்.
கலைத்துறையினர் இந்த ஆண்டு தங்கள் திறமையை உணர்ந்து செயல்படுவீர்கள். சக கலைஞர்களிடம் உதவிகளைப் பெறுவீர்கள். கிடைக்கும் ஒப்பந்தங்கள் நிறைவாக இருக்கும். சிறப்பான வருமானத்தைக் காண்பீர்கள். ரசிகர்களின் ஆதரவும் அமோகமாக இருக்கும்.
பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். அதோடு உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் இருந்தால் மட்டுமே குடும்பத்தில் அமைதியை காண்பீர்கள். மற்றபடி குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். ஆடை ஆபரண சேர்க்கைகளும் உண்டாகும்.
மாணவமணிகள் இந்த ஆண்டு முன்னேற்றத்திற்கு மேற்கொள்ளும் பயிற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். விளையாட்டிலும் உங்கள் முத்திரையை பதிப்பீர்கள். பேச்சுப்போட்டிகளிலும் கலந்து வெற்றி கொள்வீர்கள்.
பரிகாரம்: பைரவர் வழிபாடு உகந்தது.
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
இந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் பூர்த்தியாகும். உங்கள் செயல்களை முடிக்க சரியான வழிமுறைகளைத் தேர்ந்தெடுப்பீர்கள். பொருளாதார சுபிட்சங்கள் உண்டாகும். குழந்தைகளின் வழியில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். பிள்ளைகளின் உயர் படிப்புக்கான அனைத்து வசதிகளையும் செய்து முடிப்பீர்கள்.
குடும்பத்தில் குதூகலம் நிலவும். பொதுச்சேவையிலும் மனதைச் செலுத்துவீர்கள். புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். அதேநேரம் பூர்வீகச் சொத்துக்களுக்கு சிறிது செலவு செய்ய வேண்டி வரும். பெற்றோருக்கும் சிறிது மருத்துவச் செலவுகள் ஏற்படும். திருமணம் போன்ற சுப காரியங்களில் இருந்த தடைகள் விலகும். புதிய தொழில்களை வெளியூரிலும் நிறுவுவீர்கள். உங்களின் நேர்முக மறைமுக எதிரிகளின் பலம் குறையும். போட்டி பந்தயங்களிலும் வெற்றி பெறுவீர்கள். குருட்டு அதிர்ஷ்டம் என்பார்களே அது இந்த காலகட்டத்தில் உங்களைத் தேடிவரும். கூடுமானவரை உங்கள் முடிவுகளைத் தனித்தே எடுப்பீர்கள். மேலும் நீங்கள் உதவி என்று கேட்டுச் சென்றால் பலரும் உங்களுக்குத் தேவையான உதவிகளை முன்வந்து செய்வார்கள் என்றால் மிகையாகாது.
ஆகஸ்ட் மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் சம்பந்தமில்லாத விஷயங்களுக்காக குழம்ப வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதனால் வீண் விவகாரங்கள், முன்பின் தெரியாதவர்களுடன் உறவு போன்றவற்றைத் தவிர்க்கவும். வீண்வாக்குவாதங்களையும் தவிர்க்கவும். அதேநேரம் சனிபகவானின் அருளால் சோதனைகளை சாதனைகளாக மாற்றுவீர்கள். உங்களுக்குக் கிடைக்க வேண்டிய நற்பெயரை மற்றவர்கள் பயன் படுத்திக் கொள்வார்கள். நண்பர்கள், கூட்டாளிகள் தங்கள் வாக்குறுதிகளைக் காப்பாற்றமாட்டார்கள். இருப்பினும் புத்திசாலித்தனத்துடன் கொக்குக்கு மதி ஒன்றே என்கிற ரீதியில் கருத்தாக பணியாற்றுவீர்கள். அதேசமயம் போட்டியாளர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம்.
தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். மிடுக்கான தோற்றத்திற்காக புதிய ஆடைகளை வாங்குவீர்கள். கனவுகளை நனவாக்க முயல்வீர்கள். உங்களுக்கு தத்துவத்திலும் இலக்கியத்திலும் ஈடுபாடு உண்டாகும். சிறிது தூரப்பயணங்களால் நன்மைகள் கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவும் எதிர்பார்த்த படியே கிடைக்கும். உடன்பிறந்தோரிடமும் விட்டுக்கொடுத்து பழகுவீர்கள். கொடுத்த வாக்கையும் எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள். மற்றபடி அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தவும். நீங்கள் செய்யும் வீண் யோசனைகள் உங்கள் வலிமையை குறைக்கும் காலகட்டம் என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்களிடம் மேலதிகாரிகள் நட்புடன் நடந்து கொள்வார்கள். உங்களுக்குச் சிறு தொல்லைகள் கொடுத்துவந்த சக ஊழியர்கள் அடங்கி விடுவார்கள். அலுவலக வேலைகளில் கவனமாக இருப்பீர்கள். உங்களது வேலைகளை சக ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். மற்றபடி இந்த ஆண்டு பதவி உயர்வு கிடைக்கும். அதேநேரம் வருடத்தின் பிற்பகுதியில் வேண்டாத சிந்தனைகளுக்கு ஆட்பட நேரிடலாம்.
வியாபாரிகளுக்கு கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் சீராக இருந்தாலும் உங்கள் செயல்களில் கூடுதல் அக்கறை காட்டவேண்டிவரும். சமுதாயத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயர்ந்து அந்தஸ்தும் உயரும். புதிய சந்தையைக் கண்டுபிடித்து அங்கும் வியாபாரத்தைச் செய்ய முற்படுவீர்கள். கூட்டாளிகளும் நண்பர்களும் உங்கள் சொல்லுக்கு மதிப்பு கொடுப்பார்கள். அதேநேரம் ஆண்டின் பிற்பகுதியில் எதிலும் விழிப்புடன் இருக்கவும். புதிய முதலீடுகளை நன்கு ஆலோசித்த பிறகே செய்யவும்.
விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். விளைச்சல் எதிர்பார்த்ததைவிட அதிகரிக்கும். நீர்வரத்து அதிகமாக இருப்பதால் நீர்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். புதிய குத்தகைகள் கிடைப்பதில் சிறிது தாமதமுண்டானாலும் இறுதியில் உங்கள் கைக்கு வந்து சேரும். பூச்சிகளால் பயிர்களுக்கு பாதிப்பு இராது. ஆண்டின் முற்பகுதியில் பழைய கடன்களை அடைத்து விடுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களுடன் தொடர்பு உண்டாகும். மாற்றுக் கட்சியினரும் ஆதரவு தருவார்கள். தொண்டர்களுடன் சுமுக உறவு நிறைந்திருக்கும். மேலும் அரசு அதிகாரிகளும் உங்களுடன் நட்புடன் பழகுவார்கள். கட்சி மேலிடத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு இருக்கும்.
கலைத்துறையினரைத் தேடி புதிய ஒப்பந்தங்கள் தாமதமாக வந்து சேரும். ரசிகர்களின் ஆதரவும் குறைந்தே காணப்படும். மற்றபடி வெளியூர் வெளிநாடு பயணங்களை இந்த 2015 ஆம் ஆண்டு செய்ய நேரிடும். உங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ள புதிய பயிற்சிகளைச் செய்வீர்கள். அதேநேரம் எவருக்கும் வாக்கு தர வேண்டாம்.
பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையோடு பழகுவார்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்திருக்கும். உடலாரோக்கியம் சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த செய்திகள் உங்கள் செவிகளை வந்தடையும். ஆடை ஆபரணங்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள்.
மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவார்கள். மற்றபடி மதிப்பெண்களைப் பெறுவதற்குக் கடினமாக உழைக்க வேண்டும். உடலாரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்களிடம் வீண் சண்டைச் சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம்.
பரிகாரம்: குரு பகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
இந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் பணப்புழக்கத்தில் குறைவு ஏற்படாது என்றாலும் சேமிப்புகளுக்கு இடமிருக்காது. சமூகத்தில் உங்கள் பெயர், புகழ் கூடும். உங்களின் தன்னம்பிக்கை உயரும். உற்றார் உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
எடுத்த காரியங்களைச் சிரமமின்றி முடித்து விடுவீர்கள். பெரியோர்களின் நட்பும் ஆசியும் உங்களுக்கு உந்து சக்தியாக அமையும். உங்களுக்கு மனதளவில் நெருக்கடி கொடுத்தவர்கள். விலகிச் செல்வார்கள். உடலில் இருந்த நோய்நொடி உபாதைகள் ஒவ்வொன்றாக மறையத் தொடங்கும். குடும்பத்திலும் மருத்துவச் சலவுகள் குறையும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு உண்டாகும்.
ஆன்மிகத்தில் ஈடுபாடும் கோயில், தர்மஸ்தாபனம் இவை சம்பந்தப்பட்ட விஷயங்களில் நன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் அமைதியும் சுப நிகழ்ச்சிகளும் நடக்கக் காண்பீர்கள். அதேநேரம் குழந்தைகள் வழியில் சில மனச் சஞ்சலங்கள் தோன்றி மறையும். அதோடு பேசும் போது கவனமாக இருக்கவும். உங்கள் பேச்சுகள் தவறாக புரிந்துக்கொள்ளப்படும். அவசர முடிவுகளால் பணவிரயம் உண்டாகலாம். எச்சரிக்கைத் தேவை.
குழப்பங்களைத் தவிர்க்க தனிமையை நாடுவீர்கள். வெளிவிஷயங்களிலும் காலத்தைக் கழிக்க முயற்சி செய்யுங்கள். மற்றபடி எவ்வளவு சிக்கலான நிலைமையில் மாட்டிக் கொண்டாலும் எந்தவித பாதிப்புமில்லாமல் வெளியில் வந்து விடுவீர்கள். அதே சமயம் வாகனங்களில் பயணம் செய்யும்போது கவனத்துடன் இருக்கவும். அடுத்தவர்களின் தவறுகள் உங்களை பாதிப்படையச் செய்யும். மற்றபடி வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புகள் நலம் தரும்.
ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஆண்டு இறுதி வரையில் உள்ள காலகட்டத்தில் பணவருவாய் அதிகமாக இருப்பதால் எதிர்கால பிரகாசமான வாழ்க்கைக்கு வித்திடுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் கூடும். எதிரிகள் உங்களைக் கண்டு விலகி ஓடுவார்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களிடம் ஆதரவுடன் நடந்து கொண்டு உங்கள் முயற்சிகள் துரிதமாக வெற்றியடையும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள்.
உற்றார் உறவினர்களிடம் சுமுகமாக பழகி வர, உங்கள் பழைய மனத்தாங்கல்கள் சீர்படும். உங்கள் உடலாரோக்கியம் பலப்படும். சிலருக்கு புதிய இல்லங்களுக்கு மாறும் யோகமும் உண்டாகும். சமூகத்தில் நல்ல பெயர் உண்டாகும். பெரிய செல்வந்தர்களிடம் நட்பு கிடைக்கும். அவர்களின் செல்வாக்கையும் உங்கள் வளர்ச்சிக்கும் பயன்படுத்திக் கொள்வீர்கள். உங்களிடம் பெருந்தன்மை நிறைந்து காணப்படும். செய்தொழில் மூலமாகச் செய்து வந்த பயணங்களால் லாபம் அதிகரிக்கும்.
பங்கு வர்த்தகம் மூலமாகவும் உபரி வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் மனதிற்கினிய சம்பவங்கள் நடக்கும். சமூகத்தில் நலிவடைந்தவர்களுக்கும் சேவை செய்வீர்கள். உங்களின் விடாமுயற்சிகளால் அரிய பலன்கள் கிடைக்கும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் இருந்து வந்த கெடுபடிகள் குறைந்து சுமுகமான சூழ்நிலை தென்படும். அதேநேரம் அலைச்சல்களுக்கு பயந்து வேலைகளை தட்டிக் கழித்தால் வீண் பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். அதனால் பணிகளைத் திட்டமிட்டு மகிழ்ச்சியுடன் செய்து முடிப்பீர்கள். மேலும் உங்கள் வேலைகளை சக ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்
டாம். அலுவலகத்தில் உங்கள் கோரிக்கைகள் கருணையுடன் பரீசீலிக்கப்பட்டு உங்கள் நிலைமை உயரும்.
வியாபாரிகள் கடின முயற்சிகளைச் செய்து கொடுக்கல்வாங்கலில் சிறப்புகளைக் காண்பார்கள். எதிரிகளின் தொல்லைகளில் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள். வியாபாரத்தைப் பெருக்குவதற்காக வண்டி வாகனங்களா வாங்குவார்கள். சரளமான பணவசதி இருப்பதால் புதிய பொருள்களை வாங்கி விற்க முயற்சி செய்வீர்கள். கடையையும் அழகுபடுத்தி வாடிக்கையாளர்களை கவருவீர்கள்.
விவசாயிகள் விளைச்சலில் திருப்தியைக் காண்பார்கள். விளைபொருள்களில் விற்பனையும் நன்றாக நடக்கும். விரும்பிய நேரத்தில் கடன்கள் கிடைக்கும். எதிர்காலத்திற்கு ஏற்றம் தரும் வகையில் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். நீர்வரத்தும் அதிகமாக இருப்பதால் மாற்றுப் பயிர்களை பயிரிட்டு பலன் பெறலாம். சிலருக்கு உஷ்ண ஆதிக்க நோய்களும் ஜீரணக் கோளாறுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.
அரசியல்வாதிகள் சிறப்பாகப் பணியாற்றுவார்கள். எதிரிகளும் உங்களைக் கண்டு அஞ்சுவார்கள். பொறுப்புகளை உணர்ந்து நடந்து கொள்வார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவு அவ்வப்போது குறையுமாகையால் தொண்டர்களை அரவணைத்துச் செல்லுங்கள். வசதி வாய்ப்புகள் பெருகும். அதனால் வாழ்க்கைத் தரம் உயரும் ஆண்டாக இது அமைகிறது.
கலைத்துறையினருக்கு தங்கள் துறையில் உள்ள நுணுக்கங்களை அறிந்து வைத்துக்கொண்டு தகுந்த சமயத்தில் உபயோகித்து வெற்றி பெற ஏதுவான சூழ்நிலை உண்டாகும். இதனால் பாராட்டுகளும் புகழும் கிடைக்கும். அதனால் எல்லா காலத்திலும் உழைப்பைக் கூட்டிக்கொண்டு செயல்படவும். மற்றபடி புதிய வாய்ப்புகள் தடங்கலின்றி வந்து கொண்டிருக்கும். ரசிகர்களின் ஆதரவுடன் சில பயணங்களை மேற்கொண்டு பலன் அடைவீர்கள்.
பெண்மணிகளுக்கு இந்த புத்தாண்டில் நினைத்தது நிறைவேறும். குடும்பத்தில் உங்கள் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உற்றார் உறவினர்களை அக்கறையுடன் நடத்துவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். யோகா, பிராணாயாமம் போன்றவைகளைச் செய்வீர்கள். பொருளாதாரம் ஏற்றமாக இருக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவு செய்வீர்கள். குடும்பத்துடன் மகிழ்ச்சி தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள்.
மாணவமணிகள் படிப்பில் வெற்றி வாகை சூடும் வருடமிது. போட்டிகளிலும் வெற்றி பெறுவீர்கள். வெளி விளையாட்டுகளிலும் கவனத்துடன் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பெற்றோர்களின் ஆதரவும் நிரம்ப கிடைக்கும்.
பரிகாரம்: ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு வரவும்.
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
இந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகி முன்னேற்றங்களைக் காண்பீர்கள். உங்கள் விடா முயற்சிக்கு அரிய பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் உண்டாகும். உங்கள் பேச்சில் நுண்ணறிவு வெளிப்படும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும்.
பொருளாதாரம் நிறைவாக இருக்கும். உங்களின் அதைர்யங்கள் நீங்கி தைரியம் கூடும். குழந்தைகளுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். உங்கள் ஞாபகசக்தி அதிகரிக்கும். வீட்டிலும் வெளியிலும் உங்கள் கௌரவமும் அந்தஸ்தும் உயரும். குழந்தைகளை மேற்படிப்புக்காக வெளியூர், வெளிநாடுகளுக்கு அனுப்புவீர்கள். பொது காரியங்களில் தன்னலம் பாராட்டாமல் ஈடுபடுவீர்கள். சிலர் விலையுயர்ந்த வீட்டுப் பிராணிகளை வாங்குவார்கள்.
உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். அதேசமயம் அரசாங்கத்திற்கு நீங்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை குறித்த காலத்திற்குள் சமர்ப்பிக்கவும். தீயவர்கள் என்று உணர்ந்திருந்தாலும் அவர்களின் தொடர்பை தவிர்க்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள். மற்றபடி பிறர் தயவுடன் நீங்கள் செய்து வந்த செயல்களை நீங்கள் தன்னிச்சையாக முடிக்கக்கூடிய நிலைமைகள் உருவாகும். அதோடு வாக்கு கொடுத்தால் அதை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள் என்கிற காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.
ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஆண்டு இறுதி வரை உள்ள காலட்டத்தில் உங்களின் தெய்வ பக்தி உயரும். தியானம், பிராணாயாமம் போன்றவைகளைச் செய்வீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் விவகாரமின்றி கைக்கு வந்து சேரும். சிலர் நீண்ட தூரப்பயணங்களை மேற்கொள்வீர்கள். மனதை அரித்து வந்த பிரச்னைகள் தானாகவே தீர்ந்துவிடும். உங்கள் எதிரிகள் சிதறி ஓடுவார்கள். புதிய எண்ணங்களைச் செயல்படுத்தி சாணக்கியன் என்று பெயரெடுப்பீர்கள். உறவினர்கள் நண்பர்களிடம் நெருக்கமாகப் பழகுவீர்கள். பேச்சில் நிதானத்தைக் கடைபிடித்து வெற்றி பெறுவீர்கள். உங்கள் செயல்களின்மூலம் தேவைக்கேற்ற பணவசதிகளைப் பெறுவீர்கள். மேலும் உங்கள் செல்வம் தர்மகாரியங்களுக்கும் பயன்படும். உங்கள் தொழிலில் அதிகாரம் கூடப்பெறுவீர்கள். உழைப்பு கூடினாலும் அதற்கேற்ற பலன் பன்மடங்காக உயரும். உங்கள் பழைய கடன்களும் இந்த காலகட்டத்தில் திரும்ப வரும். உங்கள் தொழிலில் அதிகாரமும் உயரப் பெறுவீர்கள். உழைப்பு கூடினாலும் அதற்கேற்ற பலன் பன்மடங்காக உயரும். உங்கள் பழைய கடன்களும் இந்த காலகட்டத்தில் திரும்பி வரும். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் நிரந்தர தீர்வு காண்பார்கள். உங்களின் நெடுநாளைய ஆசைகள் செயல்வடிவம் பெற்று உங்களை புகழின் உச்சாணிக்கே கொண்டு சென்று விடும். சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொள்வீர்கள். அதோடு உங்களின் ஆலோசனைகளை மற்றவர்கள் கேட்கும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் முன்கூட்டியே செயல்படுவார்கள். அலுவலக ரீதியான பயணங்களில் வெற்றி பெறுவார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வும் உங்களைத் தேடி வரும். உங்களின் வேலைகளை பட்டியலிட்டுச் செய்தால் அனைவரின் பாராட்டுகளையும் பெறலாம். வருமானம் சிறப்பாக இருப்பதால் கடன்வாங்க நேரிடாது. மனதிற்கினிய இடமாற்றங்களும் உள்ளூரிலேயே அமையும்.
வியாபாரிகளுக்கு நினைத்தது நினைத்தபடியே நடக்கும். வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பழைய சேமிப்புகளை முதலீடு செய்து வியாபாரத்தைப் பெருக்க நினைப்பீர்கள். அதேசமயம் கடும்போட்டிகளை நீங்கள் சந்திக்க நேரிடும். கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் நினைத்தபடியே சாதகமாக முடியும். அதேசமயம் கூட்டாளிகளின் ஒத்துழைப்பைப் பெற்று செயல்பட்டால் உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.
விவசாயிகளுக்கு இந்த ஆண்டு முழுவதும் தேவையான வருமானம் கிடைக்கும். மகசூலில் எதிர்பார்த்த அளவைக் காண்பீர்கள். அதேசமயம் புழு பூச்சிகளால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க சரியான நேரத்தில் பூச்சிக் கொல்லி மருந்துகளை உபயோகிக்கவும். வங்கிகளிடமிருந்து தக்க நேரத்தில் கடன் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் தங்கள் செயல்களைத் திட்டமிட்டு செயல்படுத்துவார்கள். இதனால் எத்தகைய கடின வேலைகளையும் மன அழுத்தத்திற்கு உள்ளாகாமல் செய்து முடிக்கவும். உங்களின் செயல்கள் படிப்படியாக வெற்றியைத் தேடித்தரும். கட்சி மேலிடத்திடம் இணக்கமான உறவை வைத்துக் கொள்வது நலம் பயக்கும். குறிப்பாக ஆண்டு பிற்பகுதியில் வாக்குவாதம், விவாதம் போன்றவற்றில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். தொண்டர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வீர்கள்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அதேநேரம் நிதானம் மற்றும் பொறுமையாகவும் நடந்து கொண்டு வெற்றிப்பாதையை எட்டுவீர்கள். பணவரவில் சிறிது தாமதமுண்டானாலும் எதிர்பார்த்த பணம் கிடைத்துவிடும். அதேநேரம் இந்த ஆண்டு முழுவதும் ரசிகர்களின் ஆதரவு சுமாராகத்தான் இருக்கும். மற்றபடி எதிர்பார்த்த பயணங்களைச் செய்வீர்கள்.
பெண்மணிகள் தன்னடக்கத்தோடும் போதுமென்ற மனநிறைவோடும் இருந்து குடும்பத்தில் தங்கள் பெயரைக் காப்பாற்றிக் கொள்வார்கள். குடும்பத்தில் ஒற்றுமையையும் கணவரிடம் இணக்கத்தையும் காண்பார்கள். உடலாரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சுற்றுலா சென்றுவர வாய்ப்புகள் உண்டாகும். அதேநேரம் எவரையும் எடுத்தெறிந்து பேசவேண்டாம்.
மாணவமணிகளின் முயற்சிகளுக்கு ஆசிரியரிடம் நல்ல பாராட்டு கிடைக்கும். சிறப்பான மதிப்பெண்களைப் பெற கடுமையாக உழைப்பீர்கள். புதிய மொழிகளை கற்கவும் ஆர்வம் உண்டாகும். உற்சாகத்துடன் இருக்க உடற்பயிற்சிகளைச் செய்வீர்கள்.
பரிகாரம்: ஸ்ரீ அனுமனை வழிபட்டு வரவும்.