புத்தாண்டு பலன் கணித்துள்ளது எப்படி?

New Year 2015 formed from sparking digits over black background

பொதுவாக ஆங்கில புத்தாண்டுக்கும், தமிழ் புத்தாண்டுக்கும் மாறுபாடு உண்டு. சூரியனின் நிலை கொண்டு அதன் இடமாற்றத்தை கணக்கில் எடுத்து தமிழ் மாதம் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆங்கில மாதமோ அப்படி அல்ல. இது உலக நாடுகள் அனைத்திலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த 2015-ம் ஆண்டின் தொடக்கத்தில் முக்கிய கிரகங்களில் குரு பகவான் வக்ரம் அடைந்து கடக ராசியில் இருக்கிறார். ஜூலை 6ல், வக்கிர நிவர்த்தி அடைந்து கடகத்தில் இருந்து சிம்மத்துக்கு செல்கிறார். அதன்பிறகு டிசம்பர் 21ல் சிம்மத்தில் இருந்து கன்னி ராசிக்கு செல்கிறார்.சனிபகவான் விருச்சிகத்திலும், ராகு கன்னியிலும், கேது மீனத்திலும் உள்ளனர். இவர்களில், சனிபகவான் ஜுன் 12ல் வக்கிரமாகிறார். அப்போது அவர் விருச்சிகத்தில் இருந்து துலாம் ராசிக்கு செல்கிறார். செப்டம்பர் 5ல், வக்கிர நிவர்த்தி அடைந்து துலாம் ராசியில் இருந்து விருச்சிகத்துக்கு சென்று விடுவார். இவை யாவையும் கருத்தில் கொண்டு, இந்த புத்தாண்டு பலன் கணிக்கப்பட்டு உள்ளது. இங்கே தரப்பட்டிருப்பது கோச்சார பலன்களே. இதில் சிலருக்கு சுமாரான பலன்களே நடக்கும் என்று குறிப்பிட்டு இருந்தாலும், அவரவர் ஜாதகத்தில் நல்ல தசை, புத்தி நடந்தால் நன்மையே நடக்கும். தசாபாதிப்பு இருந்தால், அதற்குரியதை அனுபவிக்க வேண்டி வரும். இங்கே ஒவ்வொரு ராசியினருக்கும் பரிகாரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. விரலுக்கு தகுந்த வீக்கம் என்பதுபோல், உங்களுக்கு தகுந்த பரிகாரத்தைச் செய்தால் போதும்.

Leave a Reply