உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டம் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று கொண்டிருக்கின்றது. இரு அணிகளும் சம பலத்தில் உள்ள இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் எனஎதிர்பார்த்த நிலையில் ஆஸ்திரேலிய அணி படுமோசமாக 32.2 ஓவர்களில் 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் வார்னர் 34 ரன்களும், ஹாடின் 43 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து அணியின் போல்ட் மிக அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
வெற்றி பெற 152 ரன்கள் எடுக்கவேண்டும் என்று களமிறங்கிய நியுசிலாந்து அணி 80 ரன்கள் எடுக்கும் வரை அதிரடியாக ஆடியது. ஆனால் அதன்பின்னர் ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் வீசிய அதிரடி பந்து வீச்சில் நியூசிலாந்து அணி நிலைகுலைந்தது. 23 ஓவரில் 146 ரன்கள் எடுத்து ஒன்பது விக்கெட்டுக்களை இழந்து தோல்வியடையும் நிலையில் இருந்த நியூசிலாந்து அணியை வில்லியம்சன் ஒரு சிக்சர் அடித்து காப்பாற்றினார். எனவே இந்த போட்டியில் நூலிழையில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியின் போல்ட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்தவெற்றியின் முலம் நியூசிலாந்து அணி இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.